திரையுலகினருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் ஒன்றான, தாதா சாகேப் பால்கே விருதை ரஜினிகாந்துக்கும், தேசிய விருது அறிவிக்கப்பட்ட அவரது மருமகன் தனுஷுக்கும் ஒரே நாளில் விருதுகள்  வழங்கப்படும் என மத்திய அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்: அடி மனதில் இருந்து நன்றி கூறிய தலைவர்..! உச்சகத்தில் துள்ளி குதிக்கும் ரசிகர்கள்!
 

67வது தேசிய திரைப்பட விருதுகள் சமீபத்தில்வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் ஜோடியாக நடித்து, கடந்த 2019-ம் ஆண்டு திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய படம் அசுரன். தனுஷ் இளைஞராகவும், வயதானவராகவும் இரு தோற்றங்களில் நடித்திருந்தார். கென் கருணாஸ், பசுபதி, பிரகாஷ்ராஜ், வெங்கடேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 100 நாட்களை கடந்து ஓடிய இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியடைந்தது. 

இந்நிலையில் அசுரன் படத்திற்கு சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆடுகளம் படத்தில் நடித்ததற்காக ஏற்கனவே தனுஷ் சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றிருந்த நிலையில் அசுரன் திரைப்படத்திற்காக இரண்டாவது முறையாக, சிரியந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார் தனுஷ்.

மேலும் செய்திகள்:நடிகை ஆலியா பட்டுக்கு கொரோனா பாதிப்பு..! அடுத்தடுத்து பாதிக்கப்படும் பாலிவுட் பிரபலங்கள்!
 

அதேபோல் நேற்று, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவித்தார்.
இதனை அடுத்து தாதா சாகிப் பால்கே விருதை ரஜினியும், தேசிய விருதை தனுஷும் ஒரே நாளில் பெற இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினியும், தனுஷும் ஒரே நாளில் பெற உள்ளதால் ரஜினியின் குடும்பத்தினர் உச்ச கட்ட மகிழ்ச்சியில் உள்ளனர். 

மேலும் செய்திகள்:ச்சீ… ச்சீ… ! இது என்ன கன்றாவி டிரஸ்…. மூடி வைத்ததை திறந்து காட்டிய பிக்பாஸ் நடிகையால் ரசிகர்கள் கடுப்பு
 

மே 3ஆம் தேதி தேசிய விருதுகள், வழங்கப்படும் விழாவில் அதே நாளில் தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்ட ரஜினிகாந்துக்கும் விருது வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.