ஏப்ரல் 8 வரை காத்திருங்கள்: களமிறங்கும் நோக்கியா ஜி, எக்ஸ் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்!

நோக்கியா நிறுவனத்தின் நோக்கியா ஜி சீரிஸ் மற்றும் எக்ஸ் சீரிஸ் தொடர் ஸ்மார்ட்போன்கள் ஏப்ரல் 8 ஆம் தேதி அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நோக்கியா நிறுவனம் ஸ்மார்ட்போன்கள் துறையில் தனக்கென தனி இடத்தை உருவாக்க பல்வேறு ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி நோக்கியா பிராண்ட் உரிமதாரரான எச்எம்டி குளோபல் ஏப்ரல் 8 ஆம் தேதி சாதனங்கள் வெளியீட்டு நிகழ்வை நடத்த உள்ளது. புதிய எக்ஸ் சீரிஸ் மற்றும் ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தப்போவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

நோக்கியா ஜி10, நோக்கியா ஜி20

நோக்கியா ஜி10, நோக்கியா ஜி20 நோக்கியா எக்ஸ் 10 மற்றும் நோக்கியா எக்ஸ் 20 ஆகிய ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வெளியீட்டு நிகழ்வானது ஏப்ரல் 8 ஆம் தேதி இரவு 7:30 மணிக்கு நடைபெறும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்படும் என்பது குறித்த எந்த விவரங்களும் இல்லை.

நோக்கியா ஸ்மார்ட்போன்கள் விலை விவரங்கள்

சமீபத்திய தகவலின்படி, நோக்கியா ஜி10 ஸ்மார்ட்போனானது இந்திய மதிப்புப்படி தோராயமாக ரூ.11,900 ஆக இருக்கலாம். அதேபோல் நோக்கியா ஜி20 ஸ்மார்ட்போனானது இந்திய மதிப்பிப்படி தோராயமாக ரூ.14,500 ஆக இருக்கலாம். இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் ப்ளூ மற்றும் ஊதா வண்ண விருப்பங்களஇல் கிடைக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் அடிப்படை மாறுபாடான நோக்கியா எக்ஸ் 10 இந்திய மதிப்புப்படி ரூ.25,800 ஆகவும் நோக்கியா எக்ஸ் 20 ஸ்மார்ட்போன் இந்திய மதிப்புப்படி தோராயமாக ரூ.30,000 ஆகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன்களானது பச்சை மற்றும் வெள்ளை வண்ண விருப்பங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.

நோக்கியா ஜி10 மற்றும் நோக்கியா ஜி20 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

நோக்கியா ஜி10 மற்றும் நோக்கியா ஜி20 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

நோக்கியா ஜி10 மற்றும் நோக்கியா ஜி20 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் 6.38 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேக்களுடன் வரும் என கூறப்படுகிறது. ஜி10 ஸ்மார்ட்போனானது மீடியாடெக் ஹீலியோ பி22 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் எனவும் நோக்கியா ஜி20 ஸ்மார்ட்போனானது மீடியாடெக் எஸ்ஓசி ஜி35 செயலி மூலம் இயக்கப்படும் என கூறப்படுகிறது. 3ஜிபி ரேம் மற்றும் 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்சேமிப்பு மற்றும் 64ஜிபி உள்சேமிப்புடன் வரும் என கூறப்படுகிறது. இதில் 512ஜிபி வரை விரிவாக்கக்கூடிய மெமரி ஸ்லாட் வசதி இருக்கிறது.

ஆண்ட்ராய்டு 11 ஆதரவு

இந்த ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 11 மூலம் இயக்கப்படும் எனவும் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 10 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இதில் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், இது 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 2 மெகாபிக்சல் ஆழ சென்சார், 5 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் ஆகிய பின்புற கேமராக்களுடன் வருகிறது. முன்பக்கத்தில் செல்பி வசதிக்கென 8 மெகாபிக்சல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

4500 எம்ஏஎச் பேட்டரி

4500 எம்ஏஎச் பேட்டரி

நோக்கியா எக்ஸ் 10 5ஜி மற்றும் நோக்கியா எக்ஸ் 20 5ஜி எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் குறித்து பார்க்கையில், இது 5ஜி குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 எஸ்ஓசி செயலி மூலம் இயக்கப்படுகின்றன. இது ஆண்ட்ராய்டு 11 இயக்க முறை மூலம் இயக்கப்படுகிறது. இது 4500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 10 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது.

48 மெகாபிக்சல் முதன்மை சென்சார்

48 மெகாபிக்சல் முதன்மை சென்சார்

48 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 5 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ், 2 மெகாபிக்சல் ஆழ சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் ஆகியவற்றுடன் வருகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.