ஐடி ரெய்டுகளால் நல்ல விளம்பரம்.. குஷியில் உதயநிதி

ஹைலைட்ஸ்:

ஐடி ரெய்டுகளால் திமுகவுக்கு நல்ல விளம்பரம்
ஹேப்பி மோடில் உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி
சட்டமன்ற தேர்தல்
நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவு நாளுக்கு இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில்,
திமுக
தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டிலும், மருமகன் சபரீசன் வீட்டிலும் வருமான வரித் துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.

வெற்றியை திருடுமா பாஜக? திமுகவுக்கு ப.சிதம்பரம் அட்வைஸ்!

இதேபோல் திமுகவினர் சிலர் வீடுகளில் வருமான வருத் துறை ரெய்டு நடைபெற்றது. வருமான வரி துறையினருக்கு நன்றி தெரிவிப்பதாகவும், ரெய்டால் நல்ல விளம்பரம் கிடைத்துள்ளதாகவும்
உதயநிதி ஸ்டாலின்
தெரிவித்துள்ளார்.

வருமான வரித் துறை ரெய்டு மூலம் அரசியல் கட்சிகளை மிரட்ட மத்திய பாஜக அரசு முயற்சிப்பதாக திமுக தலைவர்களும், கூட்டணி கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், வருமான வரித் துறை ரெய்டால் நல்ல பப்ளிசிட்டி கிடைத்துள்ளதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “வருமான வரித் துறையினரின் ரெய்டுகளால் திமுகவுக்கு இலவச விளம்பரம் கிடைத்துள்ளது. ரெய்டுகள் திமுகவை எந்த வகையிலும் பாதிக்கவில்லை.

எடப்பாடி பழனிசாமியை மறக்கவே மாட்டோம்.. அன்புமணி புகழாரம்!

பிரதமர் மோடியும், அமித்ஷாவும் என்னை குறிவைத்து பேசுகின்றனர். அதனால் நான் அவர்களை குறிவைத்து பேசுகிறேன். அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவின் சொத்து மதிப்பு 15000 ரூபாயில் இருந்து 120 கோடியாக உயர்ந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.