ஒருவழியாக WhatsApp-ற்கு வரும் Colour Changing அம்சம்? எதற்கு யூஸ் ஆகும்?

ஹைலைட்ஸ்:

புதிய அம்சத்தில் பணியாற்றும் வாட்ஸ்அப்
இது ஆப்பிற்குள் வண்ணங்களை மாற்ற உதவும்

பேஸ்புக்கிற்கு சொந்தமான பிரபல இன்ஸ்டன்ட் மெசேஜிங் பிளாட்பார்ம் ஆன வாட்ஸ்அப் ஒரு புதிய அம்சத்தில் செயல்படுவதாக கூறப்படுகிறது, இது வாட்ஸ்அப்பின் உள்ளே இருக்கும் வண்ணங்களை மாற்ற அனுமதிக்கும் என்றும் கூறப்படுகிறது.

WhatsApp வாய்ஸ் மெசேஜில் புதிய அப்டேட்: Length-ஆ பேசுறவங்ககிட்ட இருந்து விடுதலை!

வரவிருக்கும் வாட்ஸ்அப் அம்சங்களை டிராக் செய்யும் WABetaInfo-இன் ட்வீட்டின் படி, இந்த அம்சத்தின் உதவியுடன், பயனர்களால் chat box வண்ணங்களை மாற்ற முடியும் மற்றும் ஸ்க்ரீனில் உள்ள Text-க்கு சற்றே அடர்த்தியான பச்சை நிற ஷேடைத் தேர்வுசெய்ய முடியும்.

Video Mute : சைலன்ட் ஆக WhatsApp-இல் அறிமுகமான புது அம்சம்; அதுவும் Android-க்கு மட்டும்!

இந்த அம்சம் அனைத்து பயனர்களுக்கும் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது, இருப்பினும் தற்போது வரை இந்த அம்சம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இதுதவிர்த்து வாட்ஸ்அப் இன்னும் பல புதிய மற்றும் அற்புதமான அம்சங்களில் செயல்பட்டு வருகிறது. அப்படியாக சமீபத்தில் நீண்ட ஆடியோ மெசேஜ்களைக் கேட்பதை எளிதாக்கும் ஒரு புதிய அம்சத்தில் வாட்ஸ்அப் வேலை செய்வது பற்றிய தகவல் வெளியானது.

அந்த தகவலையும் WABetaInfo தளம் தான் வெளியிட்டது. குறிப்பிட்ட அம்சம் iOS-இல் ஆடியோ மெசேஜ் பேக்கிரவுண்ட் ஸ்பீடை மாற்ற அனுமதிக்கும். அதாவது ஒரு வீடியோவை பாஸ்ட் பார்வேட் செய்வது போல, ஒரு வாட்ஸஅப் ஆடியோ மெசேஜை நீங்கள் 1.5 எக்ஸ் அல்லது 2 எக்ஸ் வேகத்தில் பிளே செய்ய இயக்க முடியும். நிச்சயமாக, நீங்கள் ஸ்டாண்டர்ட் 1 எக்ஸ் வேகத்திலும் ஆடியோ மெசேஜ்களைக் கேட்கலாம்.

எனவே, உங்களுடைய நண்பர்கள் வழக்கம் போல மிகவும் மெதுவாக பேசும் வாட்ஸ்அப் வாய்ஸ் மெசேஜை உங்களுக்கு அனுப்பினால், அந்த மெசேஜை நீங்கள் விரைவாக புரிந்துகொள்ள (வரவிருக்கும் புதிய அம்சத்தின் வழியாக) பிளேபேக் வேகத்தை அதிகரிக்கலாம்.

இந்த அம்சம் பீட்டாவில் இருப்பதாகவும், வாட்ஸ்அப் வெர்ஷன் 2.21.60.11 இந்த அம்சத்துடன் வரும் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் பிளேபேக் ஸ்பீடை மாற்றும் வாட்ஸ்அப் துல்லியமாக எவ்வாறு வேலை செய்யும்? இந்த அம்சம் அனைவருக்கும் எப்போது வெளியிடப்படும் என்பது குறித்த தகவல்கள் மிகக் குறைவாகவே உள்ளன.

வாட்ஸ்அப்பைச் சுற்றியுள்ள மற்ற புதிய முன்னேற்றங்களை பொறுத்தவரை, WABetaInfo-வின்படி, iOS மற்றும் Android பீட்டா பயனர்களுக்கு “WhatsApp Web Beta” திட்டம் உருவாக்கம் பெறுகிறது. இது உங்கள் ஸ்மார்ட்போனை இணையத்துடன் இணைக்காமல் வாட்ஸ்அப் வெப்பை பயன்படுத்த உதவும்.

நினைவூட்டும் வண்ணம் வாட்ஸ்அப் சமீபத்தில் தனது ஆண்ட்ராய்டு ஆப் பயனர்களுக்காக ‘ம்யூட் வீடியோ’ அம்சத்தை வெளியிட்டது. ம்யூட் வீடியோ அம்சத்தைப் பயன்படுத்தி, வாட்ஸ்அப் பயனர்கள் ஒரு வீடியோவை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பகிர்வதற்கு முன்பு அல்லது பிற பயனர்களுக்கு அனுப்புவதற்கு முன்பு ம்யூட் செய்யலாம். இந்த அம்சம் ஒருவர் மற்றொரு தொடர்புடன் வீடியோவைப் பகிரும்போது வீடியோ எடிட்டிங் ஸ்க்ரீனில் அணுக கிடைக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.