கத்தோலிக்க மக்கள் அச்சமின்றி உயிர்த்த ஞாயிறு தின வழிபாடுகளில் கலந்துகொள்ள முடியும் என இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய தேவைக்கேற்ப பொறுத்தமான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு சகல கத்தோலிக்க தேவாலயங்களுக்கும் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் விளக்கமளிக்கையில் இராணுவத்தளபதி இதனைக் கூறினார்.
இதேவேளை நாட்டில் உள்ள சகல கத்தோலிக்க தேவாலயங்களுக்கும் பாதுகாப்பு வழங்குமாறு ஆலோசனை வழங்கப்படவில்லை எனினும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரால் பாதுகாப்புசபையில் இவ்விடயம் தொடர்பில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதற்கமைய தேவைக்கேற்ப பொருத்தமான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் எனவே உயிர்த்த ஞாயிறு வழிபாடுகளில் அச்சமின்றி கலந்துகொள்ளுமாறும் இராணுவத்தளபதி மேலும் தெரிவித்தார்.