தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று புதிதாக 3446 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை 8,96,226 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை 20,204 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று 82,078 மாதிரிகளுக்கு பரிசோதனைகள் மேற்கொண்டதாகவும், 81467 பேர் அதில் அடங்குவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று 1,834 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என்றும், இதுவரை 8,63,258 பேர் குணமடைந்துள்ளனர் என்றும், 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 12,764 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.