நமது கிராமங்களில் அமைதியின்மை ஏற்பட்டால், அது பாஜக-வுக்கு ஆதாயம்: மம்தா பானர்ஜி

மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜனதா, இடது சாரிகள் மற்றும் காங்கிரஸ் கூட்டணி என மும்முனை போட்டி நிலவுகிறது. ஆனால் பாஜனதா-வுக்கும் திரிணாமுல் காங்கிரஸுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவும் வகையில் பிரசார மோதல்கள் இருந்து வருகிறது.
பா.ஜனதா தலைவர்கள் திரிணாமுல் காங்கிரஸை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. அதற்கு மம்தா பானர்ஜி தக்க பதிலடி கொடுத்து வருகிறார்.
இன்று மேற்கு வங்காள முதல்வரான மம்தா பானர்ஜி ரெய்திகி என்ற இடத்தில் பேசினார் அப்போது ‘‘ஐதராபாத் (அசாசுதீன் ஓவைசி) மற்றும் ஃபர்புர்ரா ஷெரிப் (அப்பாஸ் சித்திக்) இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களை பிரிக்க பா.ஜனதாவிடம் பணம் பெற்றுள்ளனர். நீங்கள் என்ஆர்சி மற்றும் பிரிவினையை விரும்பவில்லை என்றால் அவர்களுக்கு வாக்களிக்காதீர்கள். அவர்களுக்கு வாக்களித்தால், அது பா.ஜனதாவுக்கு வாக்களித்ததற்கு சமம்.
மம்தா பானர்ஜி
இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் நாம் ஒருவருக்கொரும் தேனீர் அருந்திக்கொள்ளவது மற்றும் துர்பா பூஜை, காளி பூஜையை இணைந்து கொண்டாடுகிறோம் இதுதான் நம்முடைய கலாச்சாரம். நமது கிராமங்களில் அமைதியின்மை ஏற்பட்டால், அது பா.ஜனதாவுக்கு சாதகமாக அமையும்’’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.