நெஞ்சை உலுக்கும் சம்பவம்.. சிறுவர்களுக்கு நடந்த கொடூரம்.. வைரல் வீடியோவால் பரபரப்பு !!

காணாமல் போன நாய்க்குட்டியை தேடிச்சென்ற இரு சிறுவர்களுக்கு நடந்த கொடூரம் மனித குலத்தின் மனசாட்சியை தட்டி எழுப்பியுள்ளது. மனித உருவம் கொண்ட இப்படிபட்ட கொடூரர்களும் மண்ணில் வசிக்கின்றனர் என பலரும் சமூக வலைதளங்களில் வேதனையுடன் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தெலுங்கானா மாநிலம் மஹபூபாபாத்தில் உள்ள ஒரு தோட்டத்திற்குள் 17 மற்றும் 15 வயது உடைய இரண்டு சிறுவர்களை தங்கள் வீட்டு வளர்ப்பு நாயை தேடி சென்றுள்ளனர். ஆனால், தோட்ட வேலையில் ஈடுபட்ட பெரியவர்கள் சிறுவர்களை பிடித்து கட்டிவைத்து தாக்கயுள்ளனர்.
  
சிறுவர்களை சந்தேகத்தின் பேரில் மரத்தில் கட்டி போட்டு, அடித்து, சித்திரவதை செய்துள்ளனர். தொடர்ந்து மாட்டு சாணத்தையும் சாப்பிட சொல்லி நிரபந்தித்துள்ளனர். சிறுவர்கள் மறுக்கவே ஒருவர் மாட்டுசாணத்தை சிறுவனின் வாயில் திணித்துள்ளார். அப்போது அதனை தோட்டத்தில் காவல் வேலை பார்த்த காவலாளி செல்போனில் படம் பிடித்துள்ளார். அதோடு அதனை நண்பர்களுடன் பகிர்ந்தும் உள்ளார் அவர். 

தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுவர்களின் தாயர்களில் ஒருவர் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட காவலாளிகள் இருவரையும் போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது நடந்ததை அவர்கள் விவரித்துள்ளனர். 
 
கைது செய்யபட்டுள்ள இருவர் மீதும் இந்திய தண்டனை சட்டம் 342, 324, 504 மற்றும் சிறுவர்களை துன்புறுத்தியமைக்காக குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்ட பிரிவு 75 அவர்கள் மீது பாய்ந்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக மேலும் இருவரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.