புதுச்சேரியில் 48 மணி நேரத்திற்கு 144 தடை உத்தரவு!

புதுச்சேரி, ஏப். 3,

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலையொட்டி அமைதி மற்றும் தீங்கு விளைவிக்கும் செயல்களை தடுக்கும் நடவடிக்கையாக 48 மணி நேரத்திற்கு 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதுச்சேரி சட்டப்பேரவையின் 30 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு 6 ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

இதன்படி, நாளை இரவு 7 மணி முதல் வரும் 7-ம் தேதி காலை 7 மணிவரை இரு சக்கர வாகன பேரணிகள் தடை செய்யப்படுள்ளது.

நாளை இரவு 7 மணி முதல் வரும் 7-ம் தேதி காலை 7 மணி வரை கூட்டமாக கூடுதல், பொதுக்கூட்டங்கள் நடத்துவது, பதாகைகளை ஏந்திச்செல்வது, கோஷமிடுவது, ஒலிப்பெருக்கியினை பயன்படுத்துவது ஆகியவை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த 48 மணி நேர தடை உத்தரவு வீடு வீடாக பிரசாரம் செய்வது, மத விழாக்கள், திருமணங்கள், இறுதி சடங்குகள் அல்லது வாக்குப்பதிவு தொடர்பான பிற நடவடிக்கைகளுக்கு பொருந்தாது என புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி பூர்வா கார்க் செய்தியாளர் கூறினார்.

மேலும் புதுச்சேரியில் இதுவரை ரூ.42 கோடியே 12 லட்சத்து 6 ஆயிரம் மதிப்பிலான பணம், நகை, பரிசு பொருள்கள் பறிமுதல் செய்ப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.