மராட்டியத்தில் ஜெட் வேகமெடுத்த கொரோனா: கடந்த 24 மணி நேரத்தில் 50-ஆயிரத்தை தொட்ட பாதிப்பு

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 20 ஆயிரம், 30 ஆயிரம் என்ற அதிகரித்து வந்தது. இந்த நிலையில் இன்று ஒரேடியாக கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
மகாராஷ்டிர மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 49,447 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 37,821 பேர் குணமடைந்துள்ள நிலையில், 277 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோப்புப்படம்
தற்போது வரை 4,01,172 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை 24,95,315 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 55,656 பேர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.