முதல் முறையாக ஒரு திருநங்கை.. பிக்பாஸில் பங்கேற்கும் நடிகை ஷகிலாவின் மகள்.. தீயாய் பரவும் தகவல்!

|

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஷகிலாவின் மகள் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த ஜனவரி மாதம்தான் நிறைவடைந்தது. கொரோனா அச்சுறுத்தல் மற்றும் லாக்டவுன் காரணமாக கடந்த சீசன் தாமதமாக தொடங்கப்பட்டது.

இந்நிலையில் பிக்பாஸ் 5வது சீசனை வழக்கம் போல் ஜூன் மாதம் தொடங்க நிகழ்ச்சிக் குழு திட்டமிட்டுள்ளது.

பிரபலங்களின் பெயர்

இதற்கான வேலைகள் ஜரூராக நடைபெற்று வருகிறது. பிரபலங்கள் பலரிடமும் பிக்பாஸ் டீம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது, இதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக பேச்சு வார்த்தை நடத்தப்படுவதாக ஏற்கனவே பல்வேறு பிரபலங்களின் பெயர் அடிபட்டு வருகிறது.

பிரபலத்தின் பெயர்

பிரபலத்தின் பெயர்

அதன்படி குக் வித் கோமாளி சுனிதா, கனி, முரட்ட சிங்கிள்ஸ் இனியன், ஆர்ஜே வினோத், நடிகர் எம்எஸ் பாஸ்கர் ஆகியோரின் பெயர்கள் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மேலும் ஒரு பிரபலத்தின் பெயர் பிக்பாஸ் தொடர்பாக பேசப்பட்டு வருகிறது.

தீவிர பேச்சுவார்த்தை

தீவிர பேச்சுவார்த்தை

அதாவது பிரபல நடிகையும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் பிரபலமுமான ஷகிலாவின் மகள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தீவிர பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

திருநங்கை மிலா

திருநங்கை மிலா

மேலும் ஷகிலாவின் மகளான மிலா பங்கேற்பது கிட்டதட்ட உறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும் நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. ஷகிலாவின் வளர்ப்பு மகளான மிலா, ஒரு திருநங்கை ஆவார்.

வரலாற்றில் முதல் முறை

வரலாற்றில் முதல் முறை

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிலா பங்கேற்றால் பிக்பாஸ் வரலாற்றில் ஒரு திருநங்கை பங்கேற்பது இதுவே முதல் முறையாகும். நிகழ்ச்சி தொடங்கிய பிறகே யார் பங்கேற்க போகிறார்கள் என்பது உறுதியாக தெரியவரும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.