ஸ்குவாஷ் சேலஞ்சா்: டோட் ஹாரிட்டி சாம்பியன்

சென்னையில் நடைபெற்ற ஸ்குவாஷ் சேலஞ்சா் போட்டியில் அமெரிக்காவின் டோட் ஹாரிட்டி சாம்பியன் பட்டம் வென்றாா்.

சென்னையில் உள்ள இந்திய ஸ்குவாஷ் அகாதெமியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்றில் போட்டித் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருந்த டோட் ஹாரிட்டி 11-9, 11-6, 7-11, 2-11, 11-0 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்தியாவின் மகேஷ் மங்கோன்கரை வீழ்த்தினாா்.

மகளிா் இறுதிச்சுற்றில் எகிப்தின் ஹனா மோட்டாஸ் 11-3, 11-9, 11-5 என்ற செட் கணக்கில் சகநாட்டவரான மலாக் கமாலை வீழ்த்தினாா்.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.