அதிமுக கூட்டணியே ஆட்சிக்கு வர வேண்டும்: அனைத்து விவசாய சங்க கூட்டமைப்பு

அதிமுக கூட்டணியே ஆட்சிக்கு வர வேண்டும் என்று அனைத்து விவசாய சங்க கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் அனைத்து விவசாய சங்க கூட்டமைப்புகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் வருகின்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக கூட்டணியை ஆதரித்து இன்று ஆற்றிய உரை, நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் எங்கள் விவசாய சங்க கூட்டமைப்பு அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு அளிக்கும். ஏன் என்றால், விவசாய பெருமக்களுக்காகவும், பொதுமக்களுக்காகவும் அதிமுக அரசு செயல்படுத்திய திட்டங்கள் குறித்த செய்திகளை பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். 
குடிமராமத்து என்ற அற்புதமான திட்டத்தை செயல்படுத்தி ஏரி, குளங்களை தூர்வாரி சீரமைத்து, நிலத்தடி நீர் இன்றைக்கு உயர்வதற்கு நடவடிக்கை எடுத்ததற்காக பாராட்டப்பட வேண்டிய அரசு இன்றைக்கு நடைபெற்று கொண்டிருக்கிறது.
காவேரி – கோதாவரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஆக்கப்பூர்வமான முயற்சி எடுப்பதும் முதலமைச்சா எடப்பாடி  பழனிசாமியையும், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தையும் நாங்கள் ஆதரிப்பதற்கு ஒரு முக்கியமான காரணம். அதேபோல பல நூறு ஆண்டுகாலமாக நிறைவேற்றாமல் இருந்த அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை நிறைவேற்றி இன்றைக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை பயிரிடுவற்கான சூழ்நிலையை உருவாக்கி தந்தமைக்காக மகத்தான, சக்திமிக்க முதலமைச்சர் என்று சொல்லும் அளவிற்கு எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு இருக்கிறார்கள். அதேபோல காவேரி – குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்தார்கள். 
தலைவாசலில் 2000 ஏக்கரில் ஆசியாவிலேயே மிகப் பெரிய கால்நடை ஆராய்ச்சி பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. நிறைய பேர்களுக்கு வேலைவாய்ப்பை கொடுத்து, அங்கே ஒரு கால்நடை கல்லூரியையும் உருவாக்கி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு மிகப்பெரிய வளர்ச்சியை உருவாக்கி தந்திருக்கிறது. 
அதனால் தான், விவசாய சங்க கூட்டமைப்பு மீண்டும் அதிமுக கூட்டணியே ஆட்சிக்கு வர வேண்டும். அவர்களது நல்லாட்சி தொடர வேண்டும்.
இதைவிட விவசாயிகள் 1000, 2000 ரூபாய் கடன் வாங்கினாலே அதை திருப்பி செலுத்துவது மிக கஷ்டமான காரியம். லட்சக்கணக்கில் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர்கடன் ரத்து என்று அறிவித்து விவசாயிகளை மகிழ்வித்த முதலமைச்சர் எடப்பாடியார் என்றனர். 
 


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.