அறிமுகம் உறுதி., அதுவும் விரைவில்: சாம்சங் கேலக்ஸி ஏ52 5ஜி- எதிர்பார்க்கப்படும் அம்சம், விலை!

கடந்தமாதம் சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஏ தொடரில் இரண்டு ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்மார்ட்போனானது கேலக்ஸி ஏ72 மற்றும் கேலக்ஸி ஏ52 சாதனமாகும். இந்த சாதனங்கள் உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சாதனங்களுடன் கேலக்ஸி ஏ52 5ஜி சாதனமும் இடம்பெற்றிருந்தது. இருப்பினும் இது இந்தியாவில் தொடங்கப்படவில்லை. இந்த நிலையில் நிறுவனம் தற்போது இந்த ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. பிஐஎஸ் சான்றிதழ் இணையதளத்தில் இது காணப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ52 5ஜி

சாம்சங் கேலக்ஸி ஏ52 5ஜி

சாம்சங் கேலக்ஸி ஏ52 5ஜி சாதனமானது மாதிரி எண் SM-A526B/DS உடன் இந்திய தரநிலை இணையதளத்தில் (பிஐஎஸ்) தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. 91மொபைல்ஸ் தளம் இதை முதலில் கண்டது. இந்த சாதனம் விரைவில் வெளியாகும் என்ற தகவலைவிட வேற எந்த அம்சங்களும் விவரக்குறிப்புகளும் தெரியவில்லை.

சாம்சங் கேலக்ஸி ஏ52 5ஜி எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி ஏ52 5ஜி எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

இருப்பினும் சாம்சங் கேலக்ஸி ஏ52 5ஜி எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் எஸ் அமோலெட் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் முழு எச்டி ப்ளஸ் தெளிவுத்திறன் மற்றும் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்புடன் வருகிறது. மெமரி விரிவாக்க வசதிக்கு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் இதில் இருக்கிறது. சாம்சங் கேலக்ஸி ஏ52 5ஜி ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஓஎஸ் உடன் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் 4000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது.

குவாட் ரியர் கேமரா அமைப்பு

குவாட் ரியர் கேமரா அமைப்பு

இந்த ஸ்மார்ட்போன் குவாட் ரியர் கேமரா அமைப்புடன் வருகிறது. இது ஓஐஎஸ் ஆதரவு, 12 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ், 5 எம்பி ஆழ சென்சார், 5 எம்பி மேக்ரோ ஷூட்டர் உடன் 64 எம்பி முதன்மை கேமரா பொருத்தப்பட்டுள்ளது. செல்பி வசதிக்கு 32 எம்பி முன்புற கேமரா பொருத்தப்பட்டுள்ளது. வாட்டர் மற்றும் தூசி எதிர்ப்பு சான்றிதழுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் பாதுகாப்பு அம்சத்திற்கு இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் ஆகியவற்றுடன் வருகிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ52 5ஜி விலை

சாம்சங் கேலக்ஸி ஏ52 5ஜி விலை அம்சங்கள் குறித்து பார்க்கலாம். சாம்சங் கேலக்ஸி ஏ55 5ஜி ஐரோப்பாவில் இந்திய மதிப்புப்படி ரூ.37,000 ஆக இருக்கும், சர்வதேச சந்தையில் இதே விலை பட்டியலில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிறுவனத்தின் அறிவிப்பும் அதிகாரப்பூர்வ வெளியீட தேதியும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேலக்ஸி ஏ52 மற்றும் கேலக்ஸி ஏ72

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ52 மற்றும் கேலக்ஸி ஏ72 ஆகிய ஸ்மார்ட்போன்களை ஜிபி 67 சான்றளிக்கப்பட்ட தூசி மற்றும் வாட்டர் ரெசிஸ்டெண்ட் கட்டமைப்போடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது இரண்டு நாட்கள் பேட்டரி ஆயுள் உடன் இருக்கும் தெரிவிக்கப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி ஏ52 மற்ரும் கேலக்ஸி ஏ72 சாதனத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து பார்க்கையில், இது 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, டால்பி அட்மோஸ் ஆதரவு ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், பாதுகாப்பு அம்சத்திற்கு டிஸ்ப்ளே கைரேகை சென்சார்கள் ஆகியவையோடு இருக்கிறது.

நான்கு தனித்துவமான வண்ண விருப்பங்கள்

நான்கு தனித்துவமான வண்ண விருப்பங்கள்

சாம்சங் கேலக்ஸி ஏ52, கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன்கள் நான்கு தனித்துவமான வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. சாம்சங் கேலக்ஸி ஏ52 விலை குறித்து பார்க்கையில் 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.26,499 எனவும் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்சேமிப்பு விலை ரூ.27,999 ஆகவும் நிர்ணயிக்கப்படுகிறது. அதேபோல் சாம்சங் கேலக்ஸி ஏ72 விலை குறித்து பார்க்கையில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்சேமிப்பு விலை ரூ.34,999 எனவும் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்சேமிப்பு விலை ரூ.37999 ஆகவும் இருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.