இனப்படுகொலைக்கு ஆதாரங்கள் உண்டு! – சுமந்திரனுக்கு சிவாஜிலிங்கம் பதிலடி


சுமந்திரன் அவர்களே நீங்கள் இனப்படுகொலை என்பதை ஈழத்தமிழர்கள் கொண்டு செல்ல முடியுமென உயர்ஸ்தானிகர் கூறியமையை ஏற்றுக்கொள்வீரா என நான் எழுப்பிய கேள்விக்கு ஆம், ஏற்றுக்கொள்கின்றேன் என அன்று எம்.ஏ.சுமந்திரன் பதிலளித்திருந்தார்.

தற்போது ஆதாரம் இல்லை என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. இனப்படுகொலைக்கு போதியளவு ஆதாரங்கள் உள்ளது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

2017 ஆம் ஆண்டு வவுனியாவில் கூட்டமைப்பின் 2 வருட கால அவகாசம் தொடர்பில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே சுமந்திரன் இவ்வாறு பதிலளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வடக்கில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு ஆதாரங்கள் இல்லையென மட்டக்களப்பில் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலட்ச கணக்கான மக்கள் கொல்லப்பட்டமைக்கு ஆதாரங்கள் தேவையில்லை.இருப்பினும்,இனப்படுகொலைக்கு போதியளவு ஆதாரங்கள் உள்ளது.

ஜனாதிபதி சட்டத்தரணிக்கு சட்டம் பற்றி நான் கற்றுக்கொடுக்க வேண்டிய தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.