ஏப்ரல் 23 அறிமுகமாகும் எம்ஐ 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன்: உச்சத்தில் இருக்கும் அம்சங்கள்!

சமீபத்தில் எம்ஐ 11 அல்ட்ரா உலகளவில் வெளியிடப்பட்டது. இன்னும் இந்தியாவில் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் எம்ஐ 11 அல்ட்ரா ஏப்ரல் 23 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ஏப்ரல் 23 அறிமுகமாகும் எம்ஐ 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன்!

சியோமி நிறுவனம் சமீபத்தில் எம்ஐ 11 அல்ட்ரா சாதனத்தை உலகளவில் வெளியிடப்பட்டது. இது நிறுவனத்தின் மிகவும் சக்திவாய்ந்த ஸ்மார்ட்போனாகும். நிறுவனத்தின் எம்ஐ 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வெளியீட்டு நிகழ்வு 2021 ஏப்ரல் 23 ஆம் தேதி அமைக்கப்பட்டுள்ளது. எம்ஐ 11 தொடரில் உள்ள மற்ற ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் வருமா என தெளிவாகத் தெரியவில்லை.

அதேபோல் டிஜிட்டல் வெளியீடு நிறுவனத்தின் சமூக ஊடக பக்கங்களில் நேரடியாக ஒளிபரப்ப வாய்ப்புள்ளது. மார்ச் 23 நடந்த எம்ஐ 11 அல்ட்ரா சீனா மற்றும் குளோபல் தளங்களில் ஸ்மார்ட்போனின் விலையை வெளியிட்டுள்ளன.

ஏப்ரல் 23 அறிமுகமாகும் எம்ஐ 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன்!

ஐரோப்பாவில் எம்ஐ 11 அல்ட்ரா 12ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு விலை இந்திய மதிப்புப்பட தோராயமாக ரூ.1,02,700 ஆக இருக்கும். இந்த விலையானது பிற சந்தைகளைவிட குறைவாக இருக்கிறது. சீனாவில் எம்ஐ 11 அல்ட்ரா 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பு விலை இந்திய விலை மதிப்புப்படி ரூ.66,400 ஆக இருக்கிறது. 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு விலை ரூ.72,000 ஆகவும் மற்றும் 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி உள்சேமிப்பு விலை இந்திய மதிப்புப்படி ரூ.77,500 ஆக இருக்கிறது.

ஏப்ரல் 23 அறிமுகமாகும் எம்ஐ 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன்!

இந்த ஸ்மார்ட்போனானது பிளாக் மற்றும் வெள்ளை வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கையில், இது 6.8 இன்ச் டபிள்யூக்யூஎச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. நான்கு பக்கங்களிலும் வளைந்த டிஸ்ப்ளே வசதி இருக்கிறது. இதில் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே இருக்கிறது. அதோடு 240 ஹெர்ட்ஸ் ட்ச் மாதிரி விகிதமும் எச்டிஆர் 10 ப்ளஸ் ஆதரவும் இருக்கிறது. புதிய கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸால் பாதுகாப்பு வசதி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் எம்ஐ 11 அல்ட்ரா ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இது அட்ரினோ 660 ஜிபியூ உடன் வருகிறது. மூன்று பின்புற கேமரா அமைப்பு இதில் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 50 எம்பி முதன்மை கேமரா, இரண்டு 48 எம்பி சோனி ஐஎம்எக்ஸ் கேமராவுடன் இருக்கிறது. டெலி-மேக்ரோ லென்ஸ் 5x ஆப்டிகல் மற்றும் 120x டிஜிட்டல் ஜூம் ஆகிய ஆதரவோடு இது வருகிறது. பின்புறத்திலும் காட்சி வசதி இருப்பதால் பின்புற கேமராவையும் பயன்படுத்தி செல்பி எடுக்கலாம் என்பது இதன் கூடுதல் அம்சமாகும்.

பஞ்ச் ஹோல் கட்அவுட் அமைப்போடு இந்த கேமரா வசதி வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. இதில் 10 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது. இரட்டை ஸ்பீக்கர் ஆதரவு, பாதுகாப்பு அம்சத்திற்கு இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உடன் வருகிறது. 5ஜி, 4ஜி, வோல்ட்இ, வைஃபை 6, ப்ளூடூத் யூஎஸ்பி டைப் சி போர்ட் ஆகியவை இணைப்பு ஆதரவுகளாக உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.