ஏப்ரல் 5: இந்தியாவில் அறிமுகமாகும் நோக்கியா TWS இயர்பட்ஸ் மாடல்.!

ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் வரும் ஏப்ரல் 5-ம் தேதி புதிய நோக்கியா TWS இயர்பட்ஸ் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் பிளிப்கார்ட் தளத்தில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

நோக்கியா TWS இயர்பட்ஸ்

நோக்கியா TWS இயர்பட்ஸ்

நோக்கியா TWS இயர்பட்ஸ் மாடல் ஆனது மழை, கூட்ட நெரிசல் மிக்க பகுதி, உடற்பயிற்சி, விளையாட்டு என பல செயல்களின் போது பயன்படுத்தக்கூடியதாக இருக்கும். மேலும் கச்சிதமாக பயன்படுத்தும் வகையில் நோக்கியா TWS இயர்பட்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 aptX HD ஆடியோ தொழில்நுட்ப வசதி,

Qualcomm aptX HD ஆடியோ தொழில்நுட்ப வசதி, புளூடூத் 5.1 ஆதரவு உள்ளிட்ட பல்வேறு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா TWS இயர்பட்ஸ் மாடல். பின்பு தங்கம், நீலம், கருப்பு போன்ற நிறங்களில் வெளிவரும் இந்த புத்தம் புதிய சாதனம். மேலும் இதற்குமுன்பு அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா பவர் இயர்பட்ஸ் லைட் மாடலின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

6 ஆண்டு..130,000 மைல் பயணம்.. பூமிக்கு வந்த ரியுகு சிறுகோளின் ஒரு பகுதி.! பரபரப்பான ஆராய்ச்சி தகவல்கள்.!6 ஆண்டு..130,000 மைல் பயணம்.. பூமிக்கு வந்த ரியுகு சிறுகோளின் ஒரு பகுதி.! பரபரப்பான ஆராய்ச்சி தகவல்கள்.!

நோக்கியா பவர் இயர்பட்ஸ் லைட்

நோக்கியா பவர் இயர்பட்ஸ் லைட்

நோக்கியா பவர் இயர்பட்ஸ் லைட் மாடல் ஆனது ஐபிஎக்ஸ்7 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் மற்றும் ப்ளூடூத் 5 வசதிகளை கொண்டுள்ளது. மேலும் இந்த சாதனம் 600 எம்ஏஎச் போர்டபில் சார்ஜிங் கேஸ் வசதியுடன் வெளிவந்துள்ளது. இந்த போர்டபில் சார்ஜிங் கேஸ் ஆனது கூடுதலாக 6 முறை சார்ஜ் செய்யும் திறன் கொண்டிருக்கிறது. பின்பு இந்த இயர்பட்ஸ் மொத்தத்தில் 35 மணி நேர பிளேபேக் வழங்கும் அம்சத்துடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 வசதி உள்ளது. எனவே இது சிறந்த ஆ

நோக்கியா பவர் இயர்பட்ஸ் லைட் மாடலில் 6எம்எம் கிராபின் டிரைவர்களுடன் உயர் ரக ஆடியோ வசதி உள்ளது. எனவே இது சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வேட்டையாடுபவர்களை மிரளவைக்கும் யுக்தி: சூறாவளி போல் சுற்றி சூழ்ச்சி செய்யும் கலைமான்கள்- ட்ரோன் வீடியோ வைரல்!வேட்டையாடுபவர்களை மிரளவைக்கும் யுக்தி: சூறாவளி போல் சுற்றி சூழ்ச்சி செய்யும் கலைமான்கள்- ட்ரோன் வீடியோ வைரல்!

அசிஸ்டண்ட் வசதி மற்றும் டச் கண்ட்ரோல் அம்சமு

அதேபோல் இந்த சாதனத்தில் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி மற்றும் டச் கண்ட்ரோல் அம்சமும் உள்ளது. மேலும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி இவற்றுள் இருப்பதால் பாதுகாப்புடன் பயன்படுத்த முடியும். நோக்கியா பவர் இயர்பட்ஸ் லைட் மாடல் ஆனது யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்த ஹெச்எம்டி குளோபல் நிறுவனம்.

Vivo X60t அறிமுகம் ஆகிடுச்சு.. அடுத்து இந்தியாவில் தான் அறிமுகமா? என்ன விலையில் எதிர்பார்க்கலாம்?Vivo X60t அறிமுகம் ஆகிடுச்சு.. அடுத்து இந்தியாவில் தான் அறிமுகமா? என்ன விலையில் எதிர்பார்க்கலாம்?

நோக்கியா பவர் இயர்பட்ஸ் லைட் ஸ்னோ

குறிப்பாக நோக்கியா பவர் இயர்பட்ஸ் லைட் ஸ்னோ மற்றும் சார்கோல் என இரண்டு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அனைத்து இடங்களுக்கு எளிமையாக எடுத்துச் சென்று பயன்படுத்தலாம். நோக்கியா பவர் இயர்பட்ஸ் லைட் மாடலின் விலை ரூ.3599-என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.