ஐ.டி. ரெய்டு: தலையில் அடித்துக் கொண்ட அதிகாரி!

ஹைலைட்ஸ்:

வருமான வரித்துறை அதிகாரியும் அவரது குழுவினரும் சி.மகேந்திரனை பரிதாபமாக பார்த்துள்ளனர்
பாக்கெட்டில் இருந்த ரூ.337யை அவர்களிடம் எடுத்துக் கொடுத்துள்ளார் மகேந்திரன்

தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி தேர்தல் ஆணையமும் பணப்பட்டுவாடாவை தடுக்கும் பொருட்டு தீவிர வாகன சோதனைகளை நடத்தி பறிமுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இதனிடையே, வருமானவரித்துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களாக ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி பிரமுகர்கள் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர்.

வரி ஏய்ப்பு தொடர்பான புகார்கள், தேர்தலுக்கான பணப்பட்டுவாடா தொடர்பான புகார்கள் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக
வருமான வரித்துறை
தெரிவித்துள்ளது. அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டம், தளி தொகுதியில் போட்டியிடும் சி.பி.ஐ. வேட்பாளருக்கான தொகுதி பொறுப்பாளராக செயல்பட்டு வரும் அக்கட்சியின் மூத்த தலைவர்
சி.மகேந்திரன்
தங்கியிருந்த அறையில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தோடு வந்து வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று இரவு சோதனை செய்தனர்.

கர்நாடக மாநிலத்தின் பாஜக அமைச்சர்கள் மூலம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் முயற்சிகள் தளி தொகுதியில் நடைபெறுகிறது என்று சி.மகேந்திரன் நேற்று மாலை குற்றம் சாட்டிய னிலையில், இரவே அதிகாரிகள் அவரது அறையில் சோதனை செய்துள்ளனர்.

தினசரி நாளிதழ்களில் அதிமுக விளம்பரம்: ஊடங்களின் கருப்பு தினமா?

ஆனால், அந்த சோதனையில் அவர்களுக்கு எதுவுமே கிடைக்கவில்லை. இதையடுத்து, பீகாரை சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரியும் அவரது குழுவினரும் சி.மகேந்திரனை பரிதாபமாக பார்த்துள்ளனர். அவர் தனது பாக்கெட்டில் இருந்த ரூ.337யை அவர்களிடம் எடுத்துக் கொடுத்துள்ளார். அதற்கு அந்த பணம் வேண்டாம் என்று கூறிய பீகாரை சேர்ந்த அதிகாரி தலையில் அடித்துக் கொண்டு அங்கிருந்து சென்றதாக அப்பகுதி வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

பாஜகவால் இந்த தொகுதியில் வெற்றி பெற முடியாது என்பதால் கலவரங்களை ஏற்படுத்தி தேர்தலை நிறுத்தவும் திட்டமிட்டுள்ளனர். திமுக கூட்டணியை திசை திருப்ப ரெய்டுகளும் நடத்துகிறார்கள் என்று சி.மகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.