ஹைலைட்ஸ்:
வரும் 7ஆம் தேதி வரை அனல் காற்று வீசும்; வெயில் கொளுத்தும்
இயல்பை விட 4 முதல் 6 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும்
அந்தமான் பகுதியில் நிலை கொண்டிருந்த தாழ்வு மண்டலம் வலு குறைந்தது
தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் வரும் 6ஆம் தேதி ஒரேகட்டமாக
சட்டமன்ற தேர்தல்
வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை பொதுமக்கள் வாக்களிக்கலாம். பொதுவாக வெயில் உச்சத்தில் இருக்கும் நண்பகல் நேரத்தில் பொதுமக்கள் அதிக அளவில் வாக்களிக்க செல்ல மாட்டார்கள். எனவே அன்றைய தினம்
வானிலை
எப்படியிருக்கும் என்று தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
அடுத்த சில நாட்கள் வானிலை எப்படியிருக்கும் என்று
சென்னை
வானிலை ஆய்வு மையம் செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி,
தமிழகம்
மற்றும் புதுச்சேரியில் வரும் 7ஆம் தேதி வரை பெரும்பாலான இடங்களில் வெயில் கொளுத்தும்.
அனல் காற்று
வீசும். கன்னியாகுமரி,
தூத்துக்குடி
, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் தவிர,
லட்சக்கணக்கில் லீடிங்; சிஎம் பழனிசாமி, ஸ்டாலினை அசால்ட்டா ஓவர்டேக் செஞ்ச பத்மப்ரியா!
மற்ற அனைத்து மாவட்டங்களிலும் இயல்பை விட 4 முதல் 6 டிகிரி செல்சியஸ் வரை கூடுதல் வெப்பம் பதிவாகும். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அனல் காற்று வீசும். வடக்கு அந்தமான் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வலு குறைந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது.
ரஜினி ‘மகளுக்கு’ கொரோனா: ரசிகர்கள் கவலை
எனவே சென்னை முதல் தூத்துக்குடி வரையிலான துறைமுகங்களில் ஏற்றப்பட்டுள்ள புயல் கூண்டை குறைக்க சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. நேற்றைய தினம் பல்வேறு மாவட்டங்களில் அனல் காற்றும், புழுதியுடன் கூடிய சூறைக் காற்றும் ஆங்காங்கே வீசியது.
திமுக எம்.பிக்கு கனிமொழிக்கு கொரோனா பாதிப்பு; பிரச்சாரத்தில் புதிய சிக்கல்!
சில இடங்களில் தரைக்காற்று பலமாக வீசியது. பகலில் பெரும்பாலான இடங்களில்
வறண்ட வானிலை
நிலவியது. தமிழகத்தில் அதிகபட்சமாக திருச்சி, திருப்பத்தூர், வேலூரில் 43 டிகிரி செல்சியஸ் வரை வெயில் பதிவானது.