காங்கிரீட் வீடு கட்டிக் கொடுப்பதாகக் கூறி, பெண்களிடம் அடையாள அட்டைகளை அதிமுகவினர் சேகரித்ததாகப் புகார்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காங்கிரீட் வீடு கட்டிக் கொடுப்பதாகக் கூறி பெண்களிடம் அதிமுகவினர் அடையாள ஆவணங்களைப் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆறுமுத்தாம்பாளையம் முனியப்பா நகரிலுள்ள வீடு ஒன்றில், 50க்கும் மேற்பட்ட பெண்கள், அதிமுக சின்னத்துடன் கையில் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவற்றோடு குவிந்திருந்தனர்.

அதிமுக அரசு அமைந்தவுடன் காங்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என சிலர் அவர்களிடம் ஆவணங்களைப் பெற்றதாக திமுகவினர் குற்றம்சாட்டினர். ஆனால் அதிமுக மகளிர் அணி கூட்டமே அங்கு நடைபெற்றதாக பெண்கள் தெரிவித்த நிலையில், அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.