குண்டை தூக்கிப் போட்ட கமல்: ஆண்டவரே, அப்படி சொல்லாதீங்கனு கதறும் ரசிகர்கள்

ஹைலைட்ஸ்:

அரசியலுக்கு சினிமா தடையாக இருந்தால் அது நிறுத்தப்படும்- கமல்
கமல் பேச்சால் ரசிகர்கள் அதிர்ச்சி
தேர்தல் முடிந்த பிறகு விக்ரம் படத்தில் நடிக்கும் கமல்

மக்கள் நீதி மய்யம் எனும் கட்சியை துவங்கி நடத்தி வரும்
கமல் ஹாசன்
நாளை மறுநாள் நடக்கவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். கோவையில் அவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகின.

அவரின் கால் வீங்கியதால் பிரச்சார வாகனத்தில் ஒற்றைக் காலில் நின்ற புகைப்படம் வெளியாகி பலரையும் ஃபீல் பண்ண வைத்தது. கமலுக்காக அவரின் இளைய மகள் அக்ஷராவும், சுஹாசினி மணிரத்னமும் பிராச்சாரம் செய்துள்ளனர்.

பிரச்சாரத்தின்போது அக்ஷராவும், சுஹாசினியும் சேர்ந்து டான்ஸ் ஆடிய வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. அரசியலுக்கு வந்துவிட்டதால் படங்களில் நடிப்பதை நிறுத்த மாட்டேன். அது தான் என்னை வாழ வைக்கும் தொழில் என்று முன்பு கமல் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அவர் இன்று கோவையில் கூறியிருப்பதாவது,

அரசியலுக்கு வந்த பிறகும் படங்களில் நடிக்கிறேன் என்றால் அது என் தொழில். பிறர் தயவில் வாழக் கூடாது என்பதற்காக தொடர்ந்து என் வேலையை செய்வேன். ஆனால் சினிமா என் அரசியலுக்கு இடைஞ்சலாக இருந்தால் அது நிறுத்தப்படும் என்றார்.

கமல் பேசியதை கேட்ட ரசிகர்களோ, ஆண்டவரே அப்படி எல்லாம் சொல்லாதீர்கள். நீங்கள் தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேர்தல் முடிந்த பிறகு
லோகேஷ் கனகராஜ்
இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடிக்கவிருக்கிறார் கமல். அந்த படத்தில் ஹீரோவாக நடிப்பதுடன் தயாரிக்கவும் செய்கிறார். விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாக மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

முன்னதாக லோகேஷ் இயக்கிய மாஸ்டர் படத்தில் ஹீரோ விஜய்யை விட வில்லன் விஜய் சேதுபதியை தான் ரசிகர்கள் கொண்டாடினார்கள். அந்த நிலைமை தனக்கு வந்துவிடக் கூடாது என்பதில் கமல் கவனமாக இருக்கிறாராம்.

கொரோனா வைரஸ் பிரச்சனை எல்லாம் ஏற்படுவதற்கு முன்பு ஷங்கர் இயக்கத்தில்
இந்தியன் 2
படத்தில் நடித்து வந்தார் கமல். படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விழுந்த விபத்தில் உதவி இயக்குநர் உள்பட 3 பேர் பலியான பிறகு நிறுத்தி வைக்கப்பட்ட படப்பிடிப்பு இதுவரை துவங்கியபாடில்லை.

ரஜினி ‘மகளுக்கு’ கொரோனா: ரசிகர்கள் கவலை

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.