|
சென்னை : திரையுலகை சேர்ந்த பலருக்கும் அடுத்தடுத்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது தயாரிப்பாளர் எஸ்.சசிகாந்த்திற்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மண்டேலா படத்தின் தயாரிப்பாளரான சசிகாந்த், இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் அவர், நேற்று மாலை எனக்கு நடந்த பரிசோதனையில் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அதனால் வீட்டில் என்னை நானே தனிப்படுத்திக் கொண்டுள்ளேன்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது அவசியம். கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்த ஒவ்வொருவரும் தங்களின் உடல்நிலையை கவனித்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். தேவைப்பட்டால் பரிசோதனையும் செய்து கொள்ளுங்கள் என கேட்டுக் கொண்டுள்ளார்.
I have tested positive for COVID-19 as of last evening. While I am quarantined at home & taking necessary precautions, I urge everyone who has come in contact with me over the last few days to monitor your health closely and get yourself tested if required. #StaySafe
— Sash (@sash041075) April 4, 2021
சசிகாந்த் தயாரித்துள்ள மண்டேலா படம் இன்று டிவி மற்றும் ஓடிடி தளத்தில் நேரடியாக ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தை புதுமுக இயக்குனரான மடோனி அஸ்வின் இயக்கி உள்ளார். கிராம பஞ்சாயத்து தேர்தலில் இரு அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் யோகி பாபு ஹீரோவாக நடித்துள்ளார். அவருடன் ஷீலா ராஜ்குமார், சங்கிலி முருகன், ஜி.எம்.சுந்தர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.