தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது!

ஹைலைட்ஸ்:

தேர்தல் பிரசாரம் முடிந்த பின்னர் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அமல்
நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்துள்ளது

மொத்தம் 234 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட தமிழக சட்டப்பேரவையின் பதவிக்காலம் வருகிற மே மாதம் 24ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனிடையே, அங்கு தேர்தலை நடத்தும் பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டிருந்தது.

தொடர்ந்து, தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரேகட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறும் எனவும் அதில் பதிவான வாக்குகள் மே 2ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதையடுத்து, வேட்பாளர் அறிவிப்பு, பிரசாரம் என தமிழக தேர்தல் களம் சூடு பிடித்தது. தமிழ்நாட்டில் ஆளும் அதிமுக கூட்டணி, எதிர்க்கட்சியான
திமுக
கூட்டணி, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், டிடிவி தினகரனின் அமமுக ஆகிய கட்சிகளிடையே ஐந்து முனைப்போட்டி நிலவுகிறது.

மொத்தம் 234 இடங்களில் 118 இடங்களை கைப்பற்றும் கட்சி ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலையில், தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளில், திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அக்கட்சிக்காக தேர்தல் உத்தியாளர் பிரசாந்த் கிஷோர் செயல்படுகிறார் என்பது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.

கடந்த இரண்டு வாரங்களாக ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் என களைகட்டிய தமிழக சட்டப்பேரவைக்கு நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில்,
தேர்தல் பிரசாரம்
இன்று மாலையுடன் நிறைவடைந்துள்ளது.

முன்னதாக, அதிமுக, திமுக, இதர கட்சிகளை சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர். எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது இறுதி கட்ட பிரச்சாரத்தை எடப்பாடியில் மேற்கொண்டார். திமுக தலைவர் ஸ்டாலின் தான் போட்டியிடும் கொளத்தூர் உள்பட சென்னையின் பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.

போடு அஜக்தா… குமுக்தா… கலா மாஸ்டருடன் அண்ணாமலை டான்ஸ்!

தேர்தல் பிரசாரம் நிறைவடைந்துள்ளதால், தலைமை தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட தேர்தல் பிரசாரம் முடிந்த பின்னர் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் தற்போது அமலுக்கு வந்துள்ளது. விதிமுறைகளை கடைபிடிக்க தவறும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.