தெறிக்க விட்ட ட்ரெய்லர.. கதறியழுத சமந்தா!

தமது மாறுபட்ட நடிப்பின் மூலம் ரசிகர்களின் உள்ளம் கவர்ந்தவர் நடிகர் மாதவன். இவர்  தற்போது இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகி உள்ள ‘ராக்கெட்ரி’ படத்தில் நம்பி நாராயணனாக நடித்து வருகிறார். இந்த படத்திற்கு  அவரே திரைக்கதை எழுதி, இயக்கி, தயாரிக்கவும் செய்கிறார். மாதவனுக்கு ஜோடியாக சிம்ரனும், நடிகர்கள் சூர்யா, ஷாருக்கான் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் டிரையலர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அவருடைய ரசிகர்களிடையே  மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இது குறித்து நடிகை சமந்தா தமது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “நான் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே இந்த டிரெய்லரை பார்த்துவிட்டேன். அப்போதே எனக்கு கண்களில் கண்ணீர் வந்தது. மாதவன் சார் நீங்கள் ஒரு ஜீனியஸ்” என பதிவிட்டுள்ளார். இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடைபெற்ற உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்தபடம் உருவாக்கப்பட்டு வருகிறது.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.