சென்னை, ஏப். 4–
பிரபல பாலிவுட் நடிகரான அக்ஷய் குமாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக, தனது டுவீட்டர் பக்கத்தில் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பலர் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருகின்றனர்.
அந்த வகையில், பிரபல பாலிவுட் நடிகரான அக்ஷய் குமாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது குறித்து, அவர் தனது டுவீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:–
எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. எனவே நான் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். மேலும் மருத்துவர்கள் கூறும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சிகிச்சை பெற்று வருகிறேன். நான் விரைவில் குணமடைந்து விடுவேன் என்றும் அக்ஷய் குமார் கூறியுள்ளார்.