பஜாஜ் எலக்ட்ரிகல்ஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை.. உ.பி ஆலையில் நடப்பது என்ன?

இந்தியாவினை சேர்ந்த ஒரு பன்னாட்டு நிறுவனம் பஜாஜ் குழுமமாகும். இது மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஒரு நிறுவனமாகும். இந்த குழுமத்தினை சேர்ந்த ஒரு மிகப்பெரிய நிறுவனம் தான் பஜாஜ் எலக்ட்ரிகல்ஸ்.

இது இந்தியாவின் நுகர்வோர் எலக்ட்ரிகல்ஸ் உபகரணங்கள் உற்பத்தி செய்யும் ஒரு மிட் கேப் நிறுவனமாகும்.

குறிப்பாக லைட்டுகள், நீடித்த நுகர்வோர் பொருட்கள் உள்ளிட்ட பல எலக்ட்ரானிக் சாதனங்களை உற்பத்தி செய்து வருகின்றது.

இந்த நிறுவனம் உத்திரபிரதேசத்தின் ஷிகோஹாபாத்தில் அமைந்துள்ள அதன் உற்பத்தி ஆலையில் பணி நீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த பணி நீக்கமானது ஏப்ரல் 3, 2021 முதல் அமலுக்கு வரும் என்று பங்கு சந்தைக்கு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இது Industrial Disputes Act, 1947ன் படி, உத்திரபிரதேசத்தின் ஷிகோஹாபாத்தில் அமைந்துள்ள அதன் உற்பத்தி ஆலையில் பணி நீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த ஆலையில் 281 நிரந்தர பணியாளர்களுக்கு விஆர்எஸ் வழங்க பஜாஜ் எல்க்ட்ரிகல்ஸ் ஒப்புதல் அளித்துள்ளது.

இது நிறுவனத்தின் மறுசீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளதாகவும், இது நிறுவனத்திற்கு ஒரு நெகிழ்வு தன்மையை கொடுக்கும் என்றும் கூறியுள்ளது. எனினும் எத்தனை பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர், செய்யப்படவுள்ளனர் என்ற முழுமையான விவரங்கள் அறிவிக்கப்படவில்லை.

பஜாஜ் எலக்ட்ரிகல்ஸ் 2019 -20ம் நிதியாண்டில் 4,987 கோடி ரூபாய் டர்ன் ஓவர் செய்துள்ள மிகப்பெரிய உற்பத்தி நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டில் கடந்த ஆண்டில் மிக வேகமாக பரவி வந்த கொரோனாவின் காரணமாக பல நிறுவனங்களும் மூடப்பட்டன. குறிப்பாக பலர் வேலையினை இழந்தனர். இந்த நிலையில் தற்போது தான் பொருளாதாரம் மீண்டு வர தொடங்கியுள்ளது. இதன் காரணமாக வேலை வாய்ப்புகளும் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நடப்பு நிதியாண்டில் ஆவது இந்த நிலைமை சீரடைந்து, புதிய வேலை வாய்ப்புகள் அதிகரிக்க வேண்டும் என்பதே இங்கு அனைவரின் எண்ணமாக உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.