பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் 60,922 பேருக்கு கொரோனா

பாரிஸ்,
  
உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பட்டியலில் பிரான்ஸ் தற்போது 4-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 60,922 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48,22,470 ஆக அதிகரித்துள்ளது.

  
பிரான்சில் கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 185 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 96,678 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 2.99 லட்சத்தை கடந்துள்ளது. பிரான்சில் தற்போது சுமார் 44.26 லட்சத்துக்கு அதிகமானோர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.