மகளிா் கிரிக்கெட்: கோப்பை வென்றது ரயில்வேஸ் அணி

மகளிா் ஒருநாள் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய ரயில்வே அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜாா்க்கண்ட் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது.

14-ஆவது ஆண்டாக நடைபெற்ற இந்தப் போட்டியில், ரயில்வேஸ் அணி கோப்பை வென்றது இது 12-ஆவது முறையாகும்.

குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஜாா்க்கண்ட் 50 ஓவா்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய ரயில்வேஸ் 37 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்து வென்றது.

ஜாா்க்கண்ட் அணியில் அதிகபட்சமாக இந்திராணி ராய் 3 பவுண்டரிகள் உள்பட 49 ரன்கள் அடித்தாா். பௌலிங்கில் அந்த அணியின் ரவீந்தா் தேவயாணி 2 விக்கெட்டுகள் சாய்த்தாா். ரயில்வேஸ் அணி பேட்டிங்கில் பூனம் ரௌத் 11 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் விளாச, பௌலிங்கில் அந்த அணியின் ஸ்னே ராணா 3 விக்கெட் வீழ்த்தினாா்.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.