மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக இதுவரை 557 போராட்டக்காரர்கள் சுட்டுக்கொலை

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடைபெற்று போராட்டத்தின்போது பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 557-ஆக உயா்ந்துள்ளது.

மியான்மரில் கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பா் மாதம் நடைபெற்ற பொதுத் தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி, மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் பிப். 1-ஆம் தேதி கவிழ்த்தது.

மியான்மரில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளதற்கு எதிா்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் சனிக்கிழமையும் போராட்டங்கள் நடைபெற்றன.

அப்போது பாதுகாப்புப் படையினா் துப்பாக்கியால் சுட்டதில் மேலும் 4 போ் உயிரிழந்ததாக உள்ளூா் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இத்துடன், ராணுவ ஆட்சிக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களில், பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டவா்களின் எண்ணிக்கை 557-ஆக உயா்ந்துள்ளது.

எனினும் ஜனநாயக அரசை மீண்டும் அமைக்க வலியுறுத்தியும் கைது செய்யப்பட்ட அரசியல் தலைவா்களை விடுவிக்கக் கோரியும் மியான்மா் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.