‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் வெற்றியை அடுத்து தல அஜித், ஹெச்.வினோத், போனிகபூர் மீண்டும் கூட்டணியில் இணைந்துள்ள திரைப்படம் ‘வலிமை’. அஜித்தின் 60வது படமாக தயாராகி வரும் இதில், அஜித் ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவரில்லை ஜோடியாக ‘காலா’ பட நடிகை ஹீமோ குரோஷி நடித்துள்ளார். அஜித் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் விதவிதமாக ஹேஷ்டேக்குகளை ட்ரெண்ட் செய்து அப்டேட் கேட்டு வந்தனர்.  

மேலும் செய்திகள்: தந்தை கமலுக்காக பிரச்சாரத்தில் இறங்கிய மகள்! தெருவில் குத்தாட்டம் போட்டு வாக்கு சேகரிப்பு! வீடியோ
 

தல ரசிகர்கள், வலிமை அப்டேட்டிற்காக  செய்த அட்டகாசத்தை சொல்லி அடங்காது,  பிரச்சாரத்திற்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திருச்செந்தூர் முருகன், பாரத பிரதமர் மோடி என பலரிடமும் வலிமை அப்டேட் கேட்டு கூச்சலிடும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது.ரசிகர்களின் செயலால் பொறுமை இழந்த தல அஜித், நானும் தயாரிப்பாளரும் இணைந்து அப்டேட்டை வெளியிடும் வரை பொறுமை காக்கும் படியும், பொது இடத்தில் கண்ணியம் தவறாமல் நடந்து கொள்ளும் படியும் அறிக்கை வெளியிட்டார்.

மேலும் செய்திகள்: கீர்த்தி சுரேஷா இது? ஓவர் ஸ்லிம்… முகமெல்லாம் சுருங்கி போய் இப்படி ஆகிட்டாங்களே..! ரசிகர்கள் ஷாக்!
 

அதன் பிறகு பல நாட்கள் இழுத்தடித்த போனிகபூர்,   அஜித்தின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு மே 1-ம் தேதி ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் புரமோஷன் பணிகள் தொடங்க இருப்பதாக அறிவித்து தல ரசிகர்களை குஷியில் ஆழ்த்தினார். தல பிறந்தநாளில் டபுள் ட்ரீட் கிடைக்க உள்ளதால் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். 

இந்நிலையில் சமீபத்தில் ‘வலிமை’ பட தயாரிப்பாளர் போனி கபூர், ‘வலிமை’ பட தியேட்டர் ரிலீஸ் உரிமையை கோபுரம் பிலிம்ஸ், ரோமியோ பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இதை தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள தகவலில்,  இந்தப் படத்தின் ஒட்டு மொத்த தமிழ்நாடு தியேட்டர் உரிமையின் விலை 60 கோடி என கூறப்படுகிறது. எனவே கூடுதலாக ஒரு 20 கோடி லாபம் வைத்து 80 கோடிக்கு ஒட்டு மொத்தமாக ‘வலிமை’ படத்தின் தியேட்டர் வெளியீட்டு உரிமை விற்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்: இடுப்பை காட்டி மயக்கிய ரம்யா பாண்டியனுக்கே டஃப் கொடுக்கும் தங்கை கீர்த்தி! மூச்சு முட்டவைத்த ஹாட் போட்டோஸ்!
 

அஜித் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடித்த முந்தைய படமான ‘நேர் கொண்ட பார்வை’ படத்தை தமிழகத்தில் வெளியிட்ட ராகுல் தான் இந்த படத்தையும் வெளியிட உள்ளாராம். இதுகுறித்த மேலும் தகவல்கள் வெளியாகும் வரை கார்த்திருப்போம்.