வவுனியா – குருமன்காட்டு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரை முச்சக்கரவண்டியொன்று மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் காயங்களுக்குள்ளாகிய நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து இன்றிரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விபத்து இடம்பெற்ற போது முச்சக்கரவண்டியின் சாரதி மது போதையில் இருந்ததாகவும் அருகிலிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் விபத்தினை ஏற்படுத்திய முச்சக்கரவண்டியின் சாரதி விபத்தை ஏற்படுத்தியதும்,அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விபத்து தொடர்பாக வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில் சம்பவ இடத்திற்கு காலதாமதமாக வருகை தந்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் தப்பியோடிய முச்சக்கரவண்டியின் சாரதியின் திருநாவற்குளத்தில் உள்ள வீட்டிற்கும் சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.