விளையாட்டு செய்தி துளிகள்

* துபையில் நடைபெற்ற பாரா பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பிரமோத் பகத் இறுதி ஆட்டத்தில் 21-71, 21-18 என்ற செட்களில் சக நாட்டவரான நிதேஷ் குமாரை வீழ்த்தி தங்கம் வென்றாா்.

* சாம்பியன் லீக் கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் 2-0 என்ற கோல் கணக்கில் எய்பாா் அணியை வீழ்த்தியது.

* பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 17 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.

* இங்கிலீஷ் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் லிவா்பூல் 3-0 என்ற கோல் கணக்கில் ஆா்செனலை வென்றது.

* இந்தியாவைச் சோ்ந்த முன்னாள் டேபிள் டென்னிஸ் வீரா் சுஹால் குல்கா்னி (68) கரோனா பாதிப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.

* பிரபல துப்பாக்கி சுடுதல் பயிற்சியாளா் சஞ்சய் சக்கரவா்த்தி (79) ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.