அடேங்கப்பா…இனி ATM கார்டு இல்லாமல் நொடியில் பணம் எடுக்கலாம்.. வந்தது புதிய வசதி.!

ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் புதிய முறை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது யுபிஐ ஆப் மூலம் கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் டெபிட் கார்டு இல்லாமல் இனி ஏடிஎம்மில் இருந்து நீங்கள் சில நொடிகளில் பணத்தை எடுக்க முடியும். இதற்காக, ஏடிஎம் நிறுவனமான என்.சி.ஆர் கார்ப்பரேஷன் அண்மையில் யுபிஐ இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட ஏடிஎம் எந்திரங்களை நாட்டில் அப்டேட் செய்துள்ளது.

இந்தியாவில் ஏடிஎம்கள் அப்டேட் செய்யப்படுகிறதா?

இந்தியாவில் ஏடிஎம்கள் அப்டேட் செய்யப்படுகிறதா?

ஐ.சி.சி.டபிள்யூ (ICCW-Interoperable Cardless Cash Withdrawal) அடிப்படையில் இந்த சிறப்பு ஏடிஎம்களை நிறுவச் சிட்டி யூனியன் வங்கி என்.சி.ஆர் கார்ப்பரேஷனுடன் கைகோர்த்துள்ளது. இதுவரை, 1500 க்கும் மேற்பட்ட ஏடிஎம்கள் புதிய UPI முறையில் செயல்படும் முறைக்கு அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

இனி ஏடிஎம் அட்டைகளை எடுத்து செல்ல வேண்டியது இல்லை

இனி ஏடிஎம் அட்டைகளை எடுத்து செல்ல வேண்டியது இல்லை

அதே நேரத்தில் அதிக ஏடிஎம்களை விரைவாக மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி மக்கள் ஏடிஎம் மையங்களுக்கு ஏடிஎம் அட்டைகளை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் இப்படியொரு பிரச்னையா? இன்சைட் ரோவர் அனுப்பிய முக்கியத் தகவல்.!செவ்வாய் கிரகத்தில் இப்படியொரு பிரச்னையா? இன்சைட் ரோவர் அனுப்பிய முக்கியத் தகவல்.!

புதிய ஏடிஎம்மில் இருந்து பணத்தை எப்படி எடுப்பது ?

புதிய ஏடிஎம்மில் இருந்து பணத்தை எப்படி எடுப்பது ?

ஏடிஎம்மில் இருந்து பணத்தை எடுக்க, முதலில் நீங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள உங்களின் யுபிஐ பயன்பாட்டை பயன்படுத்த வேண்டும். தெரியாதவர்களுக்கு யுபிஐ பயன்பாடு என்பது கூகிள் பே, பிஎச்ஐஎம், பேடிஎம், ஃபோன்பே, அமேசான் பே (GPay, BHIM, Paytm, Phonepe, Amazon) போன்ற ஆப்ஸ்களை நீங்கள் பயன்படுத்தலாம்.

யுபிஐ பின் நம்பர் மட்டும் போதும்

யுபிஐ பின் நம்பர் மட்டும் போதும்

இதற்குப் பிறகு, ஏடிஎம் திரையில் காட்டப்படும் கியூஆர் (QR) குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டும். ஸ்கேனிங் முடிந்ததும், நீங்கள் வித்ட்ரா (Wihdraw) செய்ய வேண்டிய பணத்தை உள்ளிட வேண்டும், பின்னர் Continue பட்டனை அழுத்தவும்.

இதற்குப் பிறகு, உங்களுக்கு மட்டுமே தெரிந்த 4 இலக்க அல்லது 6 இலக்க யுபிஐ பின் நம்பர் கேட்கப்படும். அதை சரியாக ஏடிஎம் இயந்திரத்தில் டைப் செய்து என்டர் பட்டனை கிளிக் செய்யவும். அதன் பிறகு நீங்கள் உள்ளிட்ட பணத்தை ஏடிஎம்மில் இருந்து உடனே பெறுவீர்கள்.

கடலுக்குள் புதைக்கப்பட்ட பூமியின் 8 ஆம் கண்டம் பற்றிய திடுக்கிடும் தகவல்! வரைபடத்தை வெளியிட்ட குழு!கடலுக்குள் புதைக்கப்பட்ட பூமியின் 8 ஆம் கண்டம் பற்றிய திடுக்கிடும் தகவல்! வரைபடத்தை வெளியிட்ட குழு!

இப்போதைக்கு இந்த முறைப்படி இவ்வளவு மட்டுமே பணம் எடுக்க முடியும்

இப்போதைக்கு இந்த முறைப்படி இவ்வளவு மட்டுமே பணம் எடுக்க முடியும்

முக்கிய குறிப்பு, ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் முறை இப்போது தான் முதல் முறையாக அறிமுகம் செய்யப்படுவதினால் ஆரம்பக்கட்டமாகக் குறைந்த அளவு பணத்தை மட்டுமே எடுக்க உங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, இப்போதைக்கு நீங்கள் வெறும் ரூ .5,000 மட்டுமே பணம் எடுக்க முடியும்.

யுபிஐ பயன்பாட்டுடன் வங்கி கணக்கு இணைக்க வேண்டும்

யுபிஐ பயன்பாட்டுடன் வங்கி கணக்கு இணைக்க வேண்டும்

யுனிஃபைட் பேமென்ட்ஸ் இன்டர்ஃபேஸ் என்பது நிகழ்நேர கட்டண முறையாகும், இது மொபைல் பயன்பாட்டின் மூலம் ஒரு வங்கிக் கணக்கிலிருந்து மற்றொரு வங்கிக் கணக்கிற்கு உடனடியாக பணத்தை மாற்ற முடியும். இதற்காக, உங்கள் வங்கிக் கணக்கை யுபிஐ பயன்பாட்டுடன் இணைக்க வேண்டும்.

6 ஆண்டு..130,000 மைல் பயணம்.. பூமிக்கு வந்த ரியுகு சிறுகோளின் ஒரு பகுதி.! பரபரப்பான ஆராய்ச்சி தகவல்கள்.!6 ஆண்டு..130,000 மைல் பயணம்.. பூமிக்கு வந்த ரியுகு சிறுகோளின் ஒரு பகுதி.! பரபரப்பான ஆராய்ச்சி தகவல்கள்.!

UPI கணக்கை எப்படி உருவாக்குவது என்று உங்களுக்கு தெரியுமா?

UPI கணக்கை எப்படி உருவாக்குவது என்று உங்களுக்கு தெரியுமா?

நீங்கள் ஒரு யுபிஐ பயன்பாட்டின் மூலம் பல வங்கி கணக்குகளை இயக்கலாம் மற்றும் சில நொடிகளில் டிஜிட்டல் பேங்கிங் அல்லது ஆன்லைன் பேங்கிங் மூலமாக நிதியை மாற்றலாம். சரி, இன்னும் சிலருக்கு UPI கணக்கை எப்படி உருவாக்குவது என்று தெரிந்திருக்காது அவர்களுக்காக, கீழே புதிய UPI கணக்கை எப்படி உருவாக்குவது என்று விளக்கியுள்ளோம்.

புதிய UPI கணக்கை உருவாக்குவது எப்படி?

புதிய UPI கணக்கை உருவாக்குவது எப்படி?

யுபிஐ கணக்கை உருவாக்க மேலே குறிப்பிட்ட எந்தவொரு பயன்பாடுகளையும் நீங்கள் பதிவிறக்கலாம். இதற்குப் பிறகு, உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட்டுப் பதிவு செய்ய வேண்டும். நீங்கள் அதில் உங்கள் கணக்கைச் சேர்த்து, உங்கள் வங்கியின் பெயரை தேட வேண்டும். வங்கியின் பெயரைக் கிளிக் செய்த பிறகு, உங்கள் கணக்கைச் சேர்க்க வேண்டும்.

ஒன்னு ரெண்டு இல்ல 50 கோடி பேஸ்புக் பயனர்கள் தகவல் ஆன்லைனில் லீக்: பெயர், இருப்பிடம், மொபைல் எண் எல்லாம்!ஒன்னு ரெண்டு இல்ல 50 கோடி பேஸ்புக் பயனர்கள் தகவல் ஆன்லைனில் லீக்: பெயர், இருப்பிடம், மொபைல் எண் எல்லாம்!

இது கட்டாயம் தேவைப்படும்

இது கட்டாயம் தேவைப்படும்

உங்கள் மொபைல் எண் உங்கள் கணக்கில் இணைக்கப்பட்டிருந்தால், அதில் காண்பிக்கப்படும். கணக்கைத் தேர்ந்தெடுத்த பிறகு, உங்கள் ஏடிஎம் கார்டின் விவரங்களைக் கொடுக்க வேண்டும். அதைக் கொடுப்பதன் மூலம், உங்கள் UPI கணக்கு உருவாக்கப்பட்டுவிடும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.