அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நன்றி தெரிவித்த திமுக எம்பி கனிமொழி.!!

திமுக மகளிர் அணி செயலாளரும், எம்பியுமான கனிமொழிக்கு நேற்று முன் தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், கொரோனா தொற்று ஏற்பட்டது. நேற்று முன் தினம் மதியம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் .

இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சரும், விராலிமலை தொகுதி அதிமுக வேட்பாளருமான சி விஜயபாஸ்கர், திமுக பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்கள் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்து வருந்தினேன். அவர்கள் விரைவில் பூரண நலம் பெற பிரார்த்திக்கிறேன் என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

இதற்கு பதிலளிக்கும் விதமாக திமுக எம்பி கனிமொழி உங்களின் அக்கறை மற்றும் வாழ்த்துக்களுக்கு நன்றி என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.