அறிவோம் தாவரங்களை – குப்பைமேனி

அறிவோம் தாவரங்களை – குப்பைமேனி

குப்பைமேனி.(Acalypha indica).

கரம்புகளில், சாலைகளில் ஈரமான இடம் பார்த்து முளைத்திருக்கும் பச்சிலைச்செடி!

ஒரு அடி வரை உயரமாக வளரும்  தண்டுச்செடி!

அரி மஞ்சரி, பூனை வணங்கி, குப்பி, முள்ளிக் கீரை, சங்கர புஷ்பி, மார்ஜால மோகினி எனப் பலப் பெயரில் பரிணமிக்கும் ஒருபொருள் குறிக்கும் பலசொல் கிளவி!

இந்தியா,  ஆப்பிரிக்கா, ஏமன் என எங்கும் கிடக்கும் சின்னச் செடி!

அகத்தியர் ‘குணவாகடம்’ நூலில் அமைந்த கோபுரமேனி  இலைச்செடி!

தேரையரின் ‘குணபாடம்’ நூல் உன் பயனைத் தெளிவாய் எடுத்துப் பேசும்!

இந்தியச் சித்த மருத்துவத்தின் சிறந்தமூலிகைநீ !

வயிற்றுகிருமி, படுக்கைப் புண், சேற்றுப்புண், கோழைச் சளி,  இருமல், மூல நோய்கள், மலச் சிக்கல், ஆஸ்துமா, தோல் வியாதிகள், சொறி சிரங்கு இவற்றை  போக்கும் மூலிகைத் தாவரம்!

தோல் நோய்க்குத் தைலம் தருவாய்!

காற்றுப் பிரிய கஷாயம் தருவாய்!

வாய் சுவைக்குக் கீரை தருவாய்!

மேனியை அழகாக்கும் ஞானத் தழையே!

பார்வைக்குச் சுகம் சேர்க்கும் பசுமை மணியே!

நீவிர் கனிகள்,சுவைகள் உள்ளவரைத் தளிர்த்துச் செழித்து  வாழியவே!

நன்றி : பேரா.முனைவர் ச.தியாகராஜன்(VST)

நெய்வேலி.

📱94434050.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.