இளையராஜா-யுவன் இசையில் விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ முதல் பாடல் வெளியீட்டு தேதி அறிவிப்பு

யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘மாமனிதன்’ படத்தின் முதல் பாடல் வெளியீட்டு தேதியை அறிவித்திருக்கிறது படக்குழு.

’மாமனிதன்’ படத்தின் மூலம் விஜய் சேதுபதி – சீனுராமசாமி கூட்டணி நான்காவது முறையாக இணைந்துள்ள இப்படத்தினை யுவன்ஷங்கர் ராஜா தயாரிக்கிறார். இளையராஜவும், யுவன் சங்கர் ராஜாவும் முதன்முறையாக இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்கள் என்பது கூடுதல் சிறப்பு. விஜய் சேதுபதியுடன் காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நீண்ட நாட்களாக படத்தை வெளியிடாமல் இருக்கிறது படக்குழு.

image

இந்நிலையில், சீனு ராமசாமி சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் “மாமனிதன் படத்தின் தலைப்பு எங்கள் படத்திற்கு உறுதியானது. தலைப்பு பெற்றதால் முதல் பார்வை, பாடல் விரைவில்” என்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் ”நாங்கள் தயாரிக்கும் இரண்டாவது படமான ‘மாமனிதன்’ படத்தின் முதல் பாடலை 7 ஆம் தேதி வெளியிடுகிறோம். அப்பாவிடமிருந்தும் என்னிடமிருந்தும் ஒரு இசை விருந்து காத்திருக்கிறது” என்று பெருமையுடன் பதிவிட்டிருக்கிறார்.

image

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ஏற்கனவே கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘பியார் பிரேமா காதல்’ படத்தை தயாரித்து வெற்றியும் கண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.