எரிபொருட்கள் விலை இன்னும் குறையலாம்.. மத்திய அமைச்சர் சொன்ன சூப்பர் விஷயம்.. !

இன்றைய காலகட்டத்தில் மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றாக மாறிவிட்ட பெட்ரோல் டீசல் விலையானது, அனுதினமும் மாற்றம் கண்டு வருகின்றது.

முன்பெல்லாம் மாத இரு முறை விலையை நிர்ணயித்து வந்த எண்ணெய் நிறுவனங்கள், தற்போது சர்வதேச சந்தையின் நிலவரத்துக்கு ஏற்ப அனுதினமும் மாற்றம் செய்து வருகின்றன.

இதனையடுத்து பெட்ரோல் டீசல் விலையானது இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து அனுதினமும் ஏற்றம் கண்டு வந்தது. இந்த நிலையில் தற்போது சில மாநிலங்களில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பெரியளவில் மாற்றம் இல்லாமல் இருந்து வருகின்றது.

எரிபொருட்கள் விலை சரிவு

சொல்லப்போனால் ஆண்டு தொடக்கத்தில் சில நகரங்களில் செஞ்சுரி அடித்த நிலையில், இன்னும் எவ்வளவு ஏற்றம் காணுமோ என்ற நிலையே இருந்து வந்தது. ஆனால் வாகன ஓட்டிகளுக்கு பெரும் நிம்மதி அளிக்கும் வகையில், கடந்த சில வாரங்களாகவே பெட்ரோல், டீசல் விலையானது பெரியளவில் மாற்றம் காணவில்லை. அதோடு சமையல் எரிவாயு விலையும் இம்மாதம் குறைந்துள்ளது.

இன்னும் எரிபொருள் விலை குறையும்

இன்னும் எரிபொருள் விலை குறையும்

இதற்கிடையில் வாகன ஓட்டிகளுக்கு இன்னும் சற்று நிம்மதி அளிக்கும் வகையில், இனி வரும் காலத்தில் இன்னும் எரிபொருள் விலையானது குறையும் என்றும் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் அறிவித்த நிலையில், பிப்ரவரி 27 முதல் எரிபொருள் விலையானது பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகிறது.

எவ்வளவு குறைவு

எவ்வளவு குறைவு

குறிப்பாக கடந்த மார்ச் 24ல் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது பெரியளவில் மாற்றமின்றி, முறையே 61 பைசா மற்றும் 60 பைசா குறைந்துள்ளது. இதே சமையல் எரிவாயு விலையானது 10 ரூபாய் குறைந்துள்ளது. இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமானால் கடந்த சில தினங்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது மீண்டும் சரிய தொடங்கியுள்ளது.

கச்சா எண்ணெய் விலை நிலவரம்
 

கச்சா எண்ணெய் விலை நிலவரம்

WTI கச்சா எண்ணெய் விலையானது தற்போது 1.42% குறைந்து, பேரலுக்கு 60.58 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இதே பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையானது பேரலுக்கு 1.46% குறைந்து 63.91 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. மார்ச் 19-க்கு பிறகு WTI கச்சா எண்ணெய் விலையானது ஒரு ரேஞ்சுக்குள்ளே வர்த்தகமாகி வருகின்றது. குறிப்பாக அதிகபட்சமாக 62.27 டாலர்களாகவும், குறைந்தபட்சமாக 57.29 டாலர்கள் வரையிலும் சென்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது 60.58 டாலர்களாக காணப்படுகிறது.

பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

டெல்லியில் இன்று பெட்ரோல் விலை – ரூ.90.56

மும்பையில் இன்று பெட்ரோல் விலை – ரூ.96.98

சென்னையில் இன்று பெட்ரோல் விலை – ரூ.92.58

பெங்களூரில் இன்று பெட்ரோல் விலை – ரூ.93.59

ஹைதராபாத்தில் இன்று பெட்ரோல் விலை – ரூ.94.16

டெல்லியில் இன்று டீசல் விலை – ரூ.80.87

மும்பையில் இன்று டீசல் விலை – ரூ.87.96

சென்னையில் இன்று டீசல் விலை – ரூ.85.88

பெங்களூரில் இன்று டீசல் விலை – ரூ.85.75

ஹைதராபாத்தில் இன்று டீசல் விலை – ரூ.88.20

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.