ஏப்.9 வரை ப்ளீஸ் வெயிட்; ரூ.10K பட்ஜெட்ல தரமான 6000mAh பேட்டரி போன் வருது!

ஹைலைட்ஸ்:

டெக்னோ ஸ்பார்க் 7 இந்திய அறிமுகம் அறிவிப்பு
ஏப்ரல் 9 ஆம் தேதி அமேசான் வழியாக அறிமுகம்
6000mAh பேட்டரியை பேக் செய்யும்

டெக்னோ நிறுவனம் வருகிற ஏப்ரல் 9 ஆம் தேதி டெக்னோ ஸ்பார்க் 7 என்கிற புதிய ஸ்மார்ட்போன இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இப்போது ஈ-காமர்ஸ் தளமான அமேசான் இந்தியாவில் அறிமுக தேதி மற்றும் பிரதான அம்சங்களுடன் பட்டியலிடப்பட்டுள்ளது.

டெக்னோ ஸ்பார்க் 7 ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகத்தை அமேசான் டீஸ் செய்வதால், அது அமேசான் இந்தியா தளத்தில் பிரத்யேகமாக வாங்க கிடைக்கும் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Facebook-ல மொபைல் நம்பரை கொடுத்து இருக்கீங்களா? அப்போ போச்சு!

அமேசான் பட்டியலின் படி, டெக்னோ ஸ்பார்க் 7 ஒரு பெரிய 6,000 எம்ஏஎச் பேட்டரியுடன் வரும். இந்த பேட்டரி ஒரே சார்ஜில் 41 நாட்கள் பேட்டரி ஆயுள் வழங்குவதாகக் கூறப்படுகிறது.

மேலும், இந்த ஸ்மார்ட்போன் வாட்டர் டிராப் நாட்ச் டிசைன் மற்றும் டூயல் ஃப்ரண்ட் ஃபிளாஷ் அமைப்புடன்ஒரு பெரிய டிஸ்ப்ளேவுடன் வரும் என்பதையும் பட்டியல் உறுதிப்படுத்தி உள்ளது.

Mi 11 Ultra விலை: யப்பா சாமி.. ஆள விடு நான் வேற போன் வாங்கிக்கிறேன்!

பின்புறத்தில், மேல் இடது மூலையில் செவ்வக வடிவிலான மூன்று பின்புற கேமரா அமைப்பு இருக்கும். மேலும் பின்புற கைரேகை சென்சாரும் இருக்கும்.

இந்த ஸ்மார்ட்போன் பிரகாசமான நீல நிறத்தில் காட்டப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் வலது பக்கத்தில் வால்யூம் ராக்கர் மற்றும் பவர் பட்டன்கள் வைக்கப்பட்டுள்ளன. கீழே, 3.5 மிமீ ஹெட்ஜாக் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளது.

நினைவூட்டும் வண்ணம், டெக்னோ ஸ்பார்க் 7 ஸ்மார்ட்போன் ஆனது கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்பார்க் 6 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்டவாரிசாக இருக்கும்.

டெக்னோ ஸ்பார்க் 6 ஸ்மார்ட்போனில் 6.8 இன்ச் எச்டி + டிஸ்ப்ளே, 1640 x 720 பிக்சல்கள், 20.5: 9 என்கிற அளவிலான திரை விகிதம், 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள் சேமிப்பு, ஆண்ட்ராய்டு 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம், ஹையோஸ் 7.0, 5000 எம்ஏஎச் பேட்டரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, பின்புறமாக பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் போன்ற பிரதான அம்சங்களை கொண்டிருந்தது.

மேலும் டெக்னோ ஸ்பார்க் 6 ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி 70 ப்ராசஸர், 16 மெகாபிக்சல் முதன்மை சென்சார், மேக்ரோ, டெப்த் மற்றும் AI காட்சிகளுக்காக மூன்று 2 மெகாபிக்சல் ஷூட்டர்களின் கலவையுடன் குவாட்-கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்பி ஷூட்டருடன் வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.