ஒவ்வொரு கோடையிலும் கோரமுகம் காட்டும் மாவோயிஸ்டுகள்-அடக்கும் வியூகத்துடன் சத்தீஸ்கர் செல்லும் அமித்ஷா

ஒவ்வொரு கோடையிலும் கோரமுகம் காட்டும் மாவோயிஸ்டுகள்-அடக்கும் வியூகத்துடன் சத்தீஸ்கர் செல்லும் அமித்ஷா

|

ராய்ப்பூர்: கோடைகாலங்களை தேர்ந்தெடுத்து பாதுகாப்பு படையினர் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்துவது தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று சத்தீஸ்கர் செல்கிறார்.

ஒடிஷா, சத்தீஸ்கர், ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களின் வனப்பகுதிகள்தான் மாவோயிஸ்டுகளின் மறைவிடம். கோடைகாலங்கள் இலையுதிர் காலம் என்பதால் மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் பட்டவர்த்தனமான வெளியே தெரியும்.

இதனை திசைதிருப்புவதற்க்காக மார்ச், ஏப்ரல், மாதங்களில் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்துவதை பாணியாகவே வைத்திருக்கின்றனர் மாவோயிஸ்டுகள். இந்த முறை மாவோயிஸ்டுகளின் மிக முக்கிய தலைவராம ஹித்மாவை குறிவைத்தே பாதுகாப்பு படையினர் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

ஹித்மா தலைமையில் தாக்குதல்

ஆனால் ஹித்மாவோ, பாதுகாப்பு படையினர் தேடி வருவார்கள் என்பதை தெரிந்து கொண்டு 250க்கும் மேற்பட்ட மாவோ தீவிரவாதிகளுடன் வனப்பகுதிக்குள் கனரக ஆயுதங்களுடன் தாக்குதலுக்கு தயார் நிலையில் இருந்தனர். இதனால்தான் மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் மிக நெருங்கிய நிலையில் மோதல் நடந்துள்ளது.

ஹித்மா எனும் தீவிரவாதி..

ஹித்மா எனும் தீவிரவாதி..

சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடி இளைஞர்தான் ஹித்மா. 1990களில் இளம்பிராயத்திலேயே மாவோயிஸ்டுகள் இயக்கத்தில் இணைந்தவர். இன்று அந்த இயக்கத்தின் மிக முக்கிய தலைவர்களில் ஒருவராக இருக்கிறார். பல்வேறு மாநில அரசுகள் ஹித்மாவின் தலைக்கு மொத்தம் ரூ40 லட்சம் பரிசுத் தொகை அறிவித்திருக்கின்றன.

பாதுகாப்பு படையினர் வீரமரணம்

பாதுகாப்பு படையினர் வீரமரணம்

இதனால்தான் ஹித்மாவை இலக்கு வைத்து பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். இந்த மோதலில் நமது பாதுகாப்பு படையினர் 22 பேர் வீரமரணம் அடைந்தனர். 31 பேர் படுகாயமடைந்தனர். மாவோயிஸ்டுகள் தரப்பிலும் ஏராளமான உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சி.ஆர்.பி.எப். இயக்குநர் குல்தீப்சிங் ஏற்கனவே சத்தீஸ்கர் மாநிலம் விரைந்துள்ளார்.

சத்தீஸ்கர் விரையும் அமித்ஷா

சத்தீஸ்கர் விரையும் அமித்ஷா

இதனைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இன்று சத்தீஸ்கர் செல்கிறார். அங்கு மாவோயிஸ்டுகளுடனான மோதல் நடைபெற்ற சுக்மா-பிஜப்பூர் பகுதியை பார்வையிடுகிறார். பின்னர் வீர மரணம் அடைந்த பாதுகாப்பு படையினருக்கு வீரவணக்கம் செலுத்துகிறார்; மேலும் படுகாயமடைந்த ராணுவ வீரர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கிறார்.

அமித்ஷா வியூகம்

அமித்ஷா வியூகம்

ஏற்கனவே மாவோயிஸ்டுகளின் இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி தருவோம் என அமித்ஷா எச்சரிக்கை விடுத்திருந்தார். இன்று சத்தீஸ்கர் பயணம் மேற்கொள்ளும் அமித்ஷா, மாவோயிஸ்டுகளை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் பாதுகாப்பு படையினருடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.