கண்டிப்பா வர்றேன்னு சொல்லுங்க.. ஏப்ரல் 9ம் தேதி.. திட்டமிட்டபடி.. கர்ணன் ரிலீஸ்!

|

சென்னை : நடிகர் தனது ட்விட்டர் பக்கத்தில் கர்ணன் படம் 9ந் தேதி ரிலிசாகும் என பதிவிட்டுள்ளார்.

மேலும் கர்ணன் படத்தின் அட்டகாசமான போஸ்டர் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

இதனால் கர்ணன் திட்டமிட்டபமி 9ந் தேதி ரிலீஸாகும் என்பது உறுதியாகி உள்ளது.

முன்னணி நடிகர்கள்

மாரிசெல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். இதில் தனுஷூக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையத்துள்ளார். வி கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ் தாணு இப்படத்தை தயாரித்துள்ளார். மேலும்,இதில் யோகி பாபு, லாரி, கௌரி கிஷான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

4 பாடல்களும் ஹிட்

4 பாடல்களும் ஹிட்

இப்படத்தின் பாடல்களும் டீசர்களும் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன. மேலும், இப்படம் பண்டாரத்தி என்ற பாடலால் இப்படம் சர்சையில் சிக்கி இறுதியில் மஞ்சனத்தி என்று மாற்றி அமைக்கபட்டது. இப்படத்தில் இடம் பெற்றுள்ள கண்டாவரச்சொல்லுங்கு, மஞ்சனத்தி, திரௌபதி முத்தம்,உட்றாதீங்க எப்போ என்ற அனைத்துப் பாடல்களும் வெற்றி பெற்றுள்ளன.

நேரடியாக தியேட்டரில்

நேரடியாக தியேட்டரில்

கர்ணன் படத்தில் டிரைலரை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு இருந்த நிலையில், டிரைலர் வெளியானால் ஏதேனும் புதிதாக பிரச்சினை ஏற்பட்டுவிடுமோ என்று எண்ணிய படக்குழுவினர் நேரடியாக படத்தை வெளியிட முடிவு செய்தனர். டிரைலரை எதிர்பார்த்து காத்து இருந்த தனுஷ் ரசிகர்கள் படத்தை எதிர்பார்த்து காத்துள்ளனர்.

கர்ணன் 9ந் தேதி ரிலீஸ்

கர்ணன் 9ந் தேதி ரிலீஸ்

இந்நிலையில், தமிழகத்தின் கொரோனாவில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், திட்டமிட்டபடி படம் ரிலீசாகுமா என்ற சந்தேகம் நிலவி வந்த நிலையில், நடிகர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஏப்ரல் 9ந் தேதி கர்ணன் ரிலீஸாகும் என பதிவிட்டுள்ளார். மேலும், அட்டகாசமான போஸ்டர் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். இதில் இருந்து திட்டமிட்டபடி ஏப்ரல் 9ந் தேதி கர்ணன் வெளியாவது உறுதியாகி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.