அம்ப்ரேன் அறிமுகம் செய்துள்ள அனைத்து நெக்பேண்ட்களும் ஸ்மார்ட் வாய்ஸ் அசிஸ்டென்ட் உடன் பொருத்தப்பட்டுள்ளன. இந்த நெக்பேண்ட் கூகுள் அசிஸ்டென்ட் மற்றும் சிரி ஆதரவோடு வருகிறது.

இந்தியாவில் வயர்லெஸ் நெக்பேண்ட்களை பல்வேறு நிறுவனங்களும் போட்டிப்போட்டு அறிமுகம் செய்து வருகிறது. பல்வேறு அம்சங்களோடு இயர்போன்கள், நெக்பேண்ட்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது இந்தியாவில் வயர்லெஸ் நெக்பேண்ட்களை அறிமுகம் செய்வதன் மூலம் அம்ப்ரேன் தனது தயாரிப்பு இலாக்காக்களை விரிவுப்படுத்தியுள்ளது.
வயர்லெஸ் நெக் பேண்ட்களின் கழுத்து பட்டைகள் வசதியாக சௌகரியமாக இருக்கிறது. உயர்பேஸ், நீண்ட ஆயுள் பேட்டரியுடன் இந்த நெக் பேண்ட்கள் வருகிறது. இதன் விலை ரூ.1299 முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதோடு பயனர்களுக்கு 365 நாட்கள் உத்தரவாதத்தையும் நிறுவனம் வழங்குகிறது. நெக்பேண்ட் வரம்பில் ரூ.1,299 முதல் தொடங்குகிறது. அதேபோல் மெலடி 20 விலை ரூ.1,499 ஆகவும் மெலடி 11 விலை ரூ.1,799 விலையிலும் வருகிறது.

அம்ப்ரேன் நெக் பேண்ட்கள் குறித்து லீக்கான தகவலின்படி ஸ்போர்டி மற்றும் நெக் பேண்ட் அம்சத்தோடு வருகிறது. இந்த தயாரிப்புகள் ஆனது அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் கிடைக்கின்றன. பேஸ் பேண்ட் ப்ரோ எச்டி சவுண்ட் அனுபவத்தோடு டைனமிக் டிரைவர்கள் ஆதரவையும் வழங்குகிறது. இது 6மணி நேரம் வரை நீண்ட பேட்டரி ஆயுள் அம்சத்தை கொண்டுள்ளது. பயணத்தின் போது சௌகரியத்தை உணர இது ஸ்னக் ஃபிட் டிசைன் உடன் வருகிறது. ஐபிஎக்ஸ் 5 வாட்டர் ரெசிஸ்டென்ட் அம்சமும் இதில் இருக்கிறது.
பேஸ்பேண்ட் லைட் ஆதரவானது இதன் பெயர் குறிப்பிடுவது போல் பேஸ்பேண்ட் ப்ரோ இலகுவான பதிப்பு ஆடியோ தரம் மற்றும் உயர் கம்பி பேஸ் உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் பேஸ்பேண்ட் லைட் ப்ரீமியம் ஆடியோ அனுபவத்தை பயனர்களுக்கு வழங்குகிறது.
மெலடி 20 மற்றும் மெலடி 11 ஆகிய சாதனஹ்கள் இரட்டை ஸ்டீரியோ வெளியீட்டை வழங்குகின்றன. இது 10 மிமீ டிரைவர்களுடன் உயர் விகத டிரிபிள் ஒலியை உருவாக்குகிறது. மேம்பட்ட தொழில்நுட்ப வடிவமைப்பு நீண்ட பேட்டரி ஆயுள் ஆகிய ஆதரவோடு வருகிறது. அதோடு 2 மணிநேர சார்ஜிங்கில் 8 மணிநேர ப்ளேபேக் ஆதரவை மெலடி 20 வழங்குகிறது. மெலடி 11 ஆனது 6 மணிநேர ப்ளே பேக் அனுபவத்தை வழங்குகிறது.

டிரெண்ட்ஸ் 11 ஆனது ஆழ்ந்த பேஸ் தொழில்நுட்பத்தோடு அற்புறதமான இசை அனுபவத்தை கொண்டிருக்கிறது. 6 மணி நேரம் வரை பின்னணி இசையை 1.5 மணி நேர சார்ஜிங்கில் வழங்குகிறது.
நெக் பேண்ட் தொடரின் அனைத்து மாடல்களும் ஸ்மார்ட் குரல் அசிஸ்டெண்ட் உடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. பயனர்களுக்கு மொத்தமாக ஹேண்ட்ஸ் ஃப்ரீ அனுபவத்தை இது உறுதி செய்கிறது. அதோடு கூகுள் அசிஸ்டெண்ட் மற்றும் சிரி ஆதரவையும் இது வழங்குகிறது. ஜாக்கிங் அல்லது ஜிம்மில் சாதனத்தை பயன்படுத்தும் போது இது சௌகரியமான அனுபவத்தை வழங்குகிறது. கூடுதலாக நெக் பேண்ட்கள் சிக்கல் இல்லாத சாதனங்கள் வரிசையில் பிரதானமாக இருக்கிறது. நெக் பேண்ட் மிகவும் தெளிவான அழைப்பு அனுபவத்தோடும் உள்ளமைக்கப்பட்ட மைக்ரோபோன் உடனும் வருகிறது. அதேபோல் இந்த சாதனத்தை இசை மற்றும் அழைப்புகளுக்கு இடையில் எளிதாக கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.