கொரோனாவுக்காக இனியும் பொறுக்க முடியாது: தொழில் அதிபரை மணந்த நடிகை

ஹைலைட்ஸ்:

நிதேஷ் நாயரை திருமணம் செய்து கொண்ட உத்தரா உன்னி
கொரோனா பிரச்சனையால் திருமணத்தை தள்ளி வைத்திருந்தார் உத்தரா
கடந்த ஏப்ரல் மாதமே நடக்க வேண்டிய திருமணம்

வவ்வால் பசங்க படம் மூலம் நடிகையான கேரளாவை சேர்ந்த உத்தரா உன்னிக்கும், கர்நாடக மாநிலம் மங்களூரில் வசித்து வரும் தொழில் அதிபர் நிதேஷ் நாயருக்கும்
திருமணம்
நிச்சயிக்கப்பட்டது. அவர்களின் திருமணம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடப்பதாக இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்ததால் திருமணத்தை தள்ளி வைத்தனர்.

இது குறித்து உத்தரா சமூக வலைதளத்தில் கூறியதாவது,

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருப்பதால் எல்லாம் சரியாகும் வரை எங்களின் திருமண கொண்டாட்டத்தை தள்ளி வைக்க முடிவு செய்துள்ளோம். எங்கள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முன்கூட்டியே டிக்கெட் புக் செய்தவர்களுக்கு இதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இருப்பினும் திட்டமிட்ட தேதியில் கோவிலில் வைத்து தாலி கட்டு சடங்கு நடக்கும். இது குறித்து உங்களுக்கு அப்பேட் செய்வோம். அனைவரும் தயவு செய்து பத்திரமாக இருக்கவும் என்றார்.

ஓராண்டுக்கு மேலாகியும் கொரோனா வைரஸ் பிரச்சனை முடிவுக்கு வருவதாக இல்லை. இதையடுத்தே கடந்த ஏப்ரலுக்கு பதிலாக இந்த ஏப்ரல் மாதத்தில் திருமணம் செய்து கொண்டிருக்கிறார் உத்தரா. அவருக்கும், நிதேஷுக்கும் கேரளாவில் வைத்து இன்று திருமணம் நடந்தது.

திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதை பார்த்த ரசிகர்கள் உத்தராவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

காருக்குள் மூச்சுமுட்ட முத்தம் கொடுத்த ப்ரியா ஆனந்த்: தீயாக பரவிய வீடியோ

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.