கோவில் கட்டி வழிபாடு | Dinamalar

மங்களூரு: கர்நாடகாவில், மதக்கலவரங்கள் அதிகம் நடக்கும் தக் ஷின கன்னட மாவட்டத்தில், முஸ்லிம் நபர் ஒருவர், வீட்டின் அருகே ஹிந்து கோவில் கட்டி, வழிபாடு நடத்தி வருகிறார்.

கர்நாடகாவில், முதல்வர் எடியூரப்பா தலைமை யிலான பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. இங்குள்ள தக் ஷின கன்னட மாவட்டத்தில், மதக்கலவரங்கள் அதிகம் நடப்பது வழக்கம்.இங்கு, முல்கியை அடுத்த கவதாரு கிராமத்தில், காசிம், 65, என்ற முஸ்லிம் நபர் வசிக்கிறார். இவர் தன் வீட்டின் அருகே, 19 ஆண்டுகளுக்கு முன், துளு மக்கள் அதிகம் வழிபடும் தெய்வமான, கோரகஜ்ஜாவிக்கு, கோவில் கட்டியுள்ளார்.

மத நல்லிணக்கத்தின் வெளிப்பாடாக உள்ள இந்த கோவிலில், தினந்தோறும் பூஜைகள் நடத்தும் காசிம் கூறியதாவது:கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் இருந்து, 30 ஆண்டுகளுக்கு முன், இங்கு வந்தேன். எனக்கு ஒரு பிரச்னை வந்தபோது, ஒரு ஞானியை சந்தித்தேன்.அவரது கருத்தை ஏற்று, இங்கு கோரகஜ்ஜா கோவில் கட்டினேன். இது இன்னல்களில் இருந்து தங்களை மீட்பதற்காக, துளு மக்கள் வழிபடும் தெய்வம். நான் கட்டிய கோவிலுக்கு, தினமும் மத வேறுபாடின்றி, 50க்கும் மேற்பட்டோர் வருகின்றனர். கோவில் கட்டத் துவங்கிய நாள் முதல், நான் சைவத்துக்கு மாறிவிட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.