சுட்டெரிக்கும் சூரியன், குளிர்விக்க வரும் மழை: மக்களே ரிலாக்ஸ் ப்ளீஸ்!

ஹைலைட்ஸ்:

வானிலை ஆய்வு மையம் மக்களுக்கு முக்கிய கோரிக்கை
எந்த இடங்களில் எல்லாம் வெப்ப நிலை உயரும்?
மழைக்கு வாய்ப்பான பகுதிகள் எவை?

கடலோர மாவட்டங்களில் காற்றில் ஒப்பு ஈரப்பதம் 60 முதல் 80 விழுக்காடு வரை உள்ளதால் பிற்பகல் முதல் காலை வரை வெக்கையாகவும், இயல்புக்கு மாறாக அதிகமாகவும் வியர்க்கும். தேவைக்கேற்ப குடிநீர், இளநீர், மோர் மற்றும் நீர்சத்து மிகுந்த காய்கறிகள், பழவகைகளை அதிகமாக சேர்த்துக்கொள்ளவும், பருத்தி ஆடைகளையே அணிய வேண்டும் என
சென்னை வானிலை
ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை முன்னறிவிப்பு!

ஏப்ரல் 5 முதல் 7ஆம் தேதி வரை கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, கரூர், மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட மூன்றிலிருந்து ஐந்து டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.

தமிழகத்தில் படிப்படியாக ஊரடங்கு: 7ஆம் தேதி முதல் இதெற்கெல்லாம் சிக்கல்!

திண்டுக்கல், மதுரை, கரூர், மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் அனல்காற்று வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் முற்பகல் 12 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை திறந்தவெளியில் வேலை செய்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப் படுகிறார்கள்.

ஏனைய மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட 1 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையும் உயரக்கூடும்.

வளிமண்டலத்தில் 1 கிலோமீட்டர் உயரம் வரை நிலவும் சுழற்சியின் காரணமாக இன்று (ஏப்ரல் 5) வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன்கூடிய இலேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்: அடுத்த கல்வி ஆண்டும் ஆல்பாஸ் – அமைச்சர் உறுதி!

ஏப்ரல் 6 முதல் 8 வரை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

ஏப்ரல் 9ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன்கூடிய இலேசான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

சசிகலா மீண்டும் சீண்டப்படுகிறாரா? தற்போது வெளியான அதிர்ச்சி தகவல்!

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக
எடப்பாடி
(சேலம்) 3, எருமைப்பட்டி (நாமக்கல்), மருங்காபுரி (திருச்சிராப்பள்ளி), ராசிபுரம் (நாமக்கல்), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), கிணற்கோரை (நீலகிரி), மடத்துக்குளம் (திருப்பூர்) தலா 2. தம்மம்பட்டி (சேலம்), கெட்டி (நீலகிரி), எமெராலட் (நீலகிரி), உதகமண்டலம் (நீலகிரி), கொடநாடு (நீலகிரி), லால்குடி (திருச்சிராப்பள்ளி), நத்தம் (திண்டுக்கல்) தலா 1 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவுமில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.