சுப்பர் லீக் உதைப்பந்தாட்ட போட்டி:வெற்றி பெரும் அணிகளுக்கு ஆகக்கூடிய பணப் பரிசு

சுப்பர் லீக் உதைப்பந்தாட்ட போட்டியில் ஆகக்கூடிய பரித்தொகையை வழங்குவதற்கு இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனம் தயாராகி வருகின்றது.

இதற்கமைவாக வெற்றி பெரும் அணிகளுக்கு சுமார் 24 மில்லியன் ரூபா பணப்பரிசு வழங்கப்படவுள்ளது.

இந்த போட்டி தொடர் ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி தொடக்கம் கொழும்பு சுகந்ததாச விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இதில் 10 அணிகள் கலந்துக்கொள்ளவுள்ளது. போட்டிகளை வெற்றிகரமாக நடத்துவதற்கு சர்வதேச உதைப்பந்தாட்ட சம்மேளனம் ஒத்துழைப்பு வழங்கவுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.