தமிழில் வெளிவருகிறது பிளாக் விடோ – Black widow releasing in Tamil

தமிழில் வெளிவருகிறது பிளாக் விடோ

05 ஏப், 2021 – 12:03 IST

மார்வெல் ஸ்டூடியோவின் அடுத்த சூப்பர் ஹீரோ படம் பிளாக் விடோ. சோமர்சால்ட், லோர், பெர்லின் சிண்ட்ரோம் படங்களை இயக்கிய பெண் இயக்குனர் கேட் சார்ட்லேண்ட் இயக்கி உள்ளார். 25 ஆண்டுகளாக ஹாலிவுட்டில் முன்னணியில் இருக்கும் ஸ்கார்லட் ஜான்சன் பிளாக் விடோவாக நடித்துள்ளார். அவருடன் புளோரன்ஸ் பக், டேவிட் ஹார்பர், வில்லியம் ஹர்ட் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
கொரோனா காலத்திற்கு முன்பே படம் முடிந்து ரிலீசுக்கும் தயாராகி விட்டது. தற்போது கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு விட்டது. சமீபத்தில் வெளியான காட்ஸிலா வெர்சஸ் கான் படமும் நல்ல வசூலை கொடுத்துக் கொண்டிருக்கிறது.
இதனால் இந்த படத்தை வருகிற ஜூலை 9ந் தேதி வெளியிடுவதாக மார்வெல் ஸ்டூடியோ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியாவில் ஆங்கிலத்துடன் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளிலும் வெளியாகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.