தமிழுக்கு வரும் நயன சாய் – Actress Nayana sai in Tamil film

தமிழுக்கு வரும் நயன சாய்

05 ஏப், 2021 – 10:55 IST

பூர்வீகம் தமிழ்நாடாக இருந்தாலும் பெங்களூருவில் பிறந்து வளர்ந்தவர் நயன சாய். கன்னடத்தில் ஒம்பதானே ஆடுபுதா என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இப்போது அவர் தமிழுக்கு வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
எனது தாய்மொழி தமிழ். நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக பெங்களூருவில் இருந்து சென்னை வந்து கூத்துப்பட்டறையில் நடிப்பு கற்றேன். இப்போது தமிழ் சினிமாவுக்கு வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. வேல்முருகன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறேன். இதில் தேவயானி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு மலேசியாவில் நடந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக தடைபட்டிருந்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்க இருக்கிறது.
அடுத்து அறிமுக இயக்குனர் சாம் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறேன். இதில் நான் திருநெல்வேலி பெண்ணாக நடிக்கிறேன். அதற்காக இப்போது பயிற்சி பெற்று வருகிறேன். அடுத்து ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறேன். இதனை தயாரிப்பு தரப்பில் இருந்து முறைப்படி அறிவிப்பார்கள். இது தவிர ஓடிடி தளத்திற்கென்று தயாராகும் ஒரு படத்திலும் நடிக்கிறேன். என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.