தேர்தலுக்குப் பின் ஊரடங்கு விதிக்கப்படுமா? – சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம் !

தமிழகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக தேர்தலுக்கு பின்னர் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இந்த நிலையில், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து இது தொடர்பாக விளக்கம் அளித்தார். அப்போது, தேர்தலுக்குப் பிறகு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்று பரவும் வதந்தியை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம். ஏப்ரல் 7ஆம் தேதிக்குப் பிறகு வீடு வீடாகச் சென்று காய்ச்சல் பாதித்தவர்கள் இருக்கிறார்களா என்று ஆய்வு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என கூறினார். 

பொதுமக்கள் அனைவரும் நாளை வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு வரும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். வாக்குச்சாவடியில் முகக்கவசம் வழங்குவார் என்று யாரும் நினைக்கவேண்டாம். ஒவ்வொரு வாக்குச்சாவடியும் சுத்தம் செய்து, சானிடைசர் வைக்கப்படும். தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவல் அச்சம் தரும் வகையில் மிக வேகமாக அதிகரித்து வருகிறது.

எனவே, கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்புடன் படிப்படியாகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றார். மேலும் கொரோனா பாதித்த நோயாளகிள் கடைசி ஒரு மணி நேரத்தில் வாக்களிக்கலாம். கொரோனா நோயாளிகளுக்கு தற்பாதுகாப்பு கவச உடை வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும் தேர்தலுக்கும் தடுப்பூசி போடுவதற்கும் தொடர்பில்லை. தடுப்பூசி போடுபவர்கள் தொடர்ந்து போட்டு கொள்ளலாம். தடுப்பூசி போட்ட பிறகும் கொரோனா வரலாம், வந்தாலும் தீவிர பாதிப்பை ஏற்படுத்தாது என அவர் தெரிவித்தார்.

newstm.in


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.