நிமல் லங்சாவின் தம்பி மீது தாக்குதல்


நீர்கொழும்பு கடற்கரை வீதியின் குடாபாடு பிரதேசத்தில் நீர்கொழும்பு மாநகர மேயர் தயான் லங்சா மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

குடாபாடு பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடந்த விருந்தில் கலந்துகொண்ட போது, ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மேயர், நபரொருவர் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து தாக்குதலுக்கு உள்ளான நபரின் மகன், மேயரை தாக்கியுள்ளார் என தெரியவருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை நீர்கொழும்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தயான் லங்சா, ராஜாங்க அமைச்சர் நிமல் லங்சாவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.