பாக்.,அரசுக்கு எதிராக அகதிகள் போராட்டம்| Dinamalar

இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தானில் லஷ்கர்-இ-தொய்பா, ஐஎஸ்ஐஎஸ் உள்ளிட்ட பல பயங்கரவாத அமைப்புகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. குறிப்பாக தாலிபான் பயங்கரவாத அமைப்பு இரு பகுதியை ஆக்கிரமித்துக்கொண்டு ஆப்கன் அரசை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது.

ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் ஆப்கானிஸ்தான் பயங்கரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்டு பாகிஸ்தானின் தஞ்சமடைந்த அகதிகள் முகாம்கள் பலர் உள்ளனர். பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் முக்கிய நகரான கராச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் அகதிகள் முகாம்கள் உள்ளன.
இங்கு வசிக்கும் அகதிகளுக்கு பாகிஸ்தானில் குடியுரிமை கிடையாது. அகதிகள் முகாம்களில் வசிப்பவர்களுக்கு வாக்குரிமையும் கிடையாது. மேலும் இவர்களுக்கு மொபைல் சிம் கார்டுகள் கூட அளிக்க பார்க் அரசு தடை விதித்துள்ளது. மருத்துவ வசதி, கல்வி உள்ளிட்ட அனைத்தும் இவர்களுக்கு மறுக்கப்படுகிறது. இதற்கு எதிராக 2017ஆம் ஆண்டு மனித உரிமை அமைப்புகள் பல போராடி ஆப்கன் அகதிகளுக்கு குரல் கொடுத்து வந்தன.
முகாம்களில் வைரஸ் தாக்கம் பரவி வருவதால் அவர்களுக்கு தடுப்பு மருந்து அளிக்க இம்ரான்கான் அரசு முடிவெடுத்தது. ஆனால் தற்போது ஆப்கன் அகதிகள் தங்களுக்கு தடுப்புமருந்து வேண்டாமெனவும் அதற்கு பதிலாக தங்களது வாழ்வாதாரத்துக்கு பாகிஸ்தான் அரசு உரிய நிதியை அளிக்க வேண்டும் என்றும் தங்களுக்கு மறுக்கப்பட்ட சலுகைகளை அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

latest tamil news

உள்நாட்டு பயங்கரவாதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளில் மிக முக்கியமானது ஆப்கானிஸ்தான். அகதிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் தஞ்சம் அடையும் நாட்டில் அவர்களுக்கான அடிப்படை உரிமைகள் வழங்கவேண்டும் என்பது ஐநாவின் விதி. ஆனால் இதனை தொடர்ந்து இம்ரான்கான் அரசு மீறி வருகிறது. அகதிகளை இரண்டாம் தர குடிமக்களாக பாவித்து அவர்களுக்கு உரிமை மறுக்கப்படுவதால் அவர்கள் தற்போது தங்களுக்கு போதிய நிதி ஒதுக்க போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

துன்புறுத்தலில் அகதிகள்

அகதிகள் முகாம்களில் பெண்கள் யாராவது கருவுற்றால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்க அரசு தடை விதித்துள்ளது.சொந்த நாட்டுக்கு திரும்ப இயலாமல் தஞ்சம் புகுந்த நாட்டிலும் அவதியுறும் ஆப்கானிஸ்தான் அகதிகள் தற்போது கொரோனா வைரஸ் பரவலின்போது அதிக துன்புறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

அவர்களுக்கு வைரஸ் பரிசோதனை சிகிச்சைகள் சரியாக வழங்கப்படாததால் தற்போது அதற்கான நிதியை கோரியுள்ளனர். தங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டால் அதனைக்கொண்டு தாங்களே மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தென்கிழக்கு பலுசிஸ்தான் மாகாணம், கைபர் பத்துவாலா உள்ளிட்ட பகுதிகளில் தற்போது ஆப்கன் அகதிகள் இம்ரான் அரசுக்கு எதிராக கொடி பிடிக்க துவங்கியுள்ளனர். இவர்களுக்கு உரிய நிதி அளிக்கப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் மனித உரிமை அமைப்புகள் தற்போது குரல் கொடுத்து வருகின்றன.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.